பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சுந்தரியின் வேண்டுதலைக்குச் சம்மதம் தெரிவித்தார் அம்பலம். அருகுதிண்ணையில் இருந்த வெற்றிலைத் தாம்பாளத் தில் சாஸ்திரத்திற்கென்று ஒரேயொரு வெற்றிலை மட்டுமே மிஞ்சிக்கிடந்தது ! கூட்டம் கலைந்தது. ஆனால், ஊர்ச்சனங்களின் நல்வாழ்த்துக்கள் கலைய அண்டை அயலில் அடுத்தடுத்திருந்த வீரமணியின் சொந்த ஊரான குளமங்கலத்திலும் சரி சுந்தரியின் பிறந்த மண்ணான பனங்குடத்திலும் சரி, வீரமணி-சுந்தரி தம் பதி இருவரும் வெகுஜன மரியாதையோடு வெகுவாகவே மதிக்கப்பட்டனர் 1 சத்தியம் : மகமாயிக்குப் பொதுவான சத்தியம் : ... 'ஆத்தா மகமாயிக்கு நம்ம சுந்தரிப் பொண்ணு எடுத்துப் போட்ட மஞ்சள் நந்தியா வட்டைப் பூவோட மகிமையாலே, அவளுக்கு மஞ்சள் தாலிக்குப் பதிலாய் தங்கத்தாலயே லவிச்சிது. எட்டடிக் குச்சிலே பிறந்த அழகுப் பொண்ணாம் சுந்தரிக்கு மாடிவீட்டு இளவட்டங் கள் போட்டி போட்டாங்க ஆனாலும், தன்னோட மாமன்மகன் அக்காளுக்குப் பறிஞ்சப்ப கொடுத்த வாக்கை நம்பித்தான் ரொம்பக் காலம் கன்னி கழியாப் பொண்ணாகவே காத்திருந்தாள். இடைநடுவிலே, சாவோடே மல்லுக்கு நின்னுக்கிட்டிருந்த ஆத்தாக்காரி திடுதிப்னு வச்ச ஒரு அக்கினிப் பரிட்சைக்குச் சவாப்புச் சொல்ல வேண்டிய இக்கட்டு சுந்தரிக்கு வந்திடுச்சு. விதி யாரை விட்டது ? நிதர்சனமான ஏழைப்பங்காளனாக நேருத்திரமாகக் கண்டுகொண்ட நல்ல பிள்ளை வீரமணி யைத் தெய்வமாய் நம்பி அவன்கிட்டே மனசைத் திறந்து