பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காட்டிப் பேசிச்சு சுந்தரிப் பொண்ணு மாமன் மகன் முத்தையன் ஸ்தானத்திலே நின்னு சுந்தரிக்குத் திருப் பூட்டிச்சு நம்ம வீரமணித் தங்கம் !... மகமாயி நல்ல வளாக்கும் ! நல்லவங்களான வீரமணி சுந்தரி புருஷன் பொஞ்சாதி ரெண்டுபேரையும் நல்லதனமாவே காப் பாத்திப்புட்டா மகமாயி மகராசி ! ..." கடந்த பதினெட்டு, பத்தொன்பது மாதங்களாக ஊர் வாய் இப்படிப் பெருமையாகப் பேசித்தான் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறது ! கொத்தமல்லிக் காப்பியில் ஆவி பறக்கிறது ! ஆசையான, பாசமான, நேசமான அன்பு மச்சானை மனம் கலங்கவும் கண் கலங்கவும் பார்த்தாள் சுந்தரி. அவள் : வீரமணியின் சுந்தரி ! கோழிகள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தன. வீரமணி வெய்யல் படராத நிழலில் மல்லாந்து படுத்துக் கால்களை வசமாக நீட்டிக் கொண்டபடி, "அண்ணாச்சி ... இந்தப் பாவியை பெரிய மனசு வச்சுச் சமிச்சுப்பூட மாட்டீங்களா ?' என்று விம்மி வெடிக்கத் தலைபட்டான் ! - "ஆத்தாளே !. கவண் வீசியெறிந்த கல் நெஞ்சுத் துடிப்பில் திரும்ப வும் பட்டுவிட்ட மாதிரி, துடித்தாள் சுந்தரி. ஒற்றைக் கால் வெள்ளை மூக்குத்தி தடுமாற மூக்கை உறிஞ்சினாள் இமைகளின் கரையில் சுடுநீர் கரை சேர்ந்தது. ஏங்கி னாள் : தவித்தாள் ; மச்சானே ! . தொட்டுணர்வு சிலிர்த்திடத் தொட்டு எழுப்பினாள். . . . .