பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சொப்பனம் கண்டு விழித்த மாதிரி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான் வீரமணி, பொன்வேலி கண்ட நரிப்பல் பதக்கம் ஆடியது. 'வாயைக் கொப்புளிச்சிட்டுக் காப்பித் தண்ணி குடியுங்க, மச்சான் !' சுந்தரி கெஞ்சினாள்!-கொஞ்சினால் தாலிப் பொசிப் பையும் தாம்பத்தியக் கொடுப்பினையையும் ஆத்தா மகமாயி புண்ணியத்தினால் ம ங் க ல ப் பாக்கியங்க ளாகப் பெற்றிருந்த மகராசி அவள் !... அவன் கொத்தமல்லிக் காப்பியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தான். ஏலம் சுக்கின் சுவையையும் உணர்ந்திருப் பான் அவன் - அவன் ; வீரமணி பட்டிக்காட்டு மண் படித்துக் கொடுத்த பரிசுத்தமான-வெள்ளைத்தனமான மனித நேயமும் பாசமான அன்புமும் சொத்தாகக் கிடைத்திருக்கையில், அவனுக்கு என்ன குறைச்சலாம் ? அரசந்துாரடிப் பிள்ளையார் போட்டலில் உருவாகிக் கிடந்த செங்கல் காளவாய், நாளும் பொழுதும் நெற்றி வேர்வை மண்ணில் கசிய அவனுக்கு உழைக்கக் கற்றுத் தந்துவிட்ட பிறகு அவனுடைய உடல் வல்லமைக்கு என்ன குறைச்சலாம் ?-- சுகமானதொரு விடியல் வேளையிலே அவன் தூங்கியெழுந்து, பூலோக ரம்பை யாகப் பேரெடுத்த செந்தாமரைப் பாவை சுந்தரியின் முகத்திலே கண் விழித்த அந்தக் கண் சிமிட்டும் நேரம் மெய்யாகவே மகத்துவம் நிரம்பின நேரமாகவே அமைந்தது !.-சுந்தரி அவனுக்கு வாழ்க்கைப்படவும் சம்மதச் சொல் கொடுத்தாளே. :-ஆளாகிச் சமைந்த கன்னி இளமான் சுந்தரி பயங்கரமானதோர் இடுசாமச் சோதிப்பு ஆளான நேரத்திலே, ஆண்டவனுக்கு நேராக ஆபத்சகாயன் ஆகி நல்வாக்கு வழங்கிய வீரமணியை ஏழேழு ஜன்மத்திற்கும் அவளால் எங்ங்ணம் மறக்கக் கூடும் ?