பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கேள்விக்குறியில் கொக்கி போட்டுக் கொண்ட ஆச்சரியக் குறியாகவே, புதுச் சோடியான வீரமணி - சுந்தரியின் திருமணம் விமர்சனம் செய்யப்பட்டது. சுந்தரி எதை நினைப்பாள் ? எதை மறப்பாளாம் சுந்தரி ? கசையடி பட்ட மாதிரி, செங்கதிர்கள் சுரீர்” என்று உறைத்தன, வீரமணிக்கு அப்படி என்னதான் மாய உறக்கமோ ? சாபத்துக்கு உறக்கமும் உடன்பாடுதான் போலும் ! 'லோட்டாவைக் கட்டாந்தரையில் வைத்தார் வைத்தியர். "தங்கச்சி ! உம் மச்சான் சத்த முந்தி முத்தையா அண்ணாச்சி அப்படின்னு விளிச்சுத் தன்னைச் சமிக்கும்படி என்னமோ பினாத்திச்சே, ஏனாம் ? இம்மாங்காலம் கழிச்சுச் செத்துப் பிழைச்சு அக்கரைச் சீமையிலேருந்து விதியோடு விளையாடுறாப் பிலே இங்கிட்டு முந்தாநாள் திரும்பின உன் மாமன் மகன் முத்தையன் நம்ம வீரமணியைச் சமிக்கோணு மாமே?... உம் மச்சான் நிரபராதி ஆச்சே, தங்கச்சி? சே!” அம்பலத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. 'எனக்கு ஒரு மாயமும் விளங்கல்லிங்க, பெரியவு களே!' கற்பூரம் ஆகிறாள் தாலிச் செல்வி. "நாடி நல்ல சொல் சொன்னது. வீரமணிக்கு உயிரும் உயிர்ப்புமானவளுக்குப் போன உயிர் திரும்புகிறது !