பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இதிகப்பு மண்டபத்தின் தலை நிலைப்படியில் நிழல் வீழ்ந்தது. அடுப்படியிலிருந்து திரும்பினாள் சுந்தரி, நிழலைப் பார்த்தவள், காலத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று பத்து ! நாணயமான பெண்மைப் பண்பு சிலிர்த்திட, "மச்சானே !' என்று குரல் கொடுத்தாள். மூச் ! சீரங்கத்துப்பெருமாளுக்குப் போட்டியாக, இங்கே வீரமணியும் பள்ளி கொண்டிருந்தான் ! உவமை சேர்த்துப் பார்த்தவளுக்கு, ஒப்புவமை இல்லாமல் புதுச்சிரிப்புக் கீறியது. கஞ்சிப் பொழுதுக்கு இ.

  • 4.

ஒழுங்கைப் பனை உச்சிக்கு வெயில் தாவினாடியும், பத்தியக்கஞ்சிகாய்ச்சி மச்சானுக்குக் கொடுத்துப்புடனும்! மறு வினாடியில், வீரமணி சற்று முன்னர் புலம்பின புலம்பல் நெஞ்சடி வாரத்தில் எரிமலையாக வெடிக்கவே, அவள் மறுபடி நிலை குலைந்தாள் - என்னோட நேச மச்சான், முத்தையா அண்ணாச்சி !'ன்னு விளிச்சு என் மாமன் மகன் கிட்டே ஏதுக்கு மன்னிப்பு - மாப்புக் கேட்டாகளாம் ? திருகுவலிச் சோதனையாட்டம் புதுசாய்ப் பிரச்னை முளைச்சிடுச்சே ?... என்னைச் சுமங்கலி ஆக்கிட்ட என்னோட புண்யவான் மச்சான், என் மாமன்மகன் முத்தையாவுக்குமனசறிஞ்சு ஒரு வஞ்சினையும் செய்யலையே? மறுகா, ஏதுக்கு அவுககிட்டே எம்மச்சான் மாப்புக் கேட்கணுமாம்? தரைக் கெண்டை கணக்கில் அவள் தத்தளித்தாள். பூசுமஞ்சள்துள் பூசிய வதனம் கசிந்தது.