பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 'நீங்க அழுவுரீங்களே, மச்சானே ?’’ 'ஊகூம்; நான் அழுகல்லையே!” 'பொய் சொல்லுநீங்க !' "அடி ஆத்தே - நான்பொய் சொல்லுறேனாங் காட்டி ஒன்னைக் கண்ணாலம் கட்டிக்கிட்ட இந்தப் பதினெட்டு, பத்தொம்பது மாசக் கெடுவிலே சாத்திரக் காச்சும் ஒரு பொய் மனசறிஞ்சு சொன்னது உண்டா, புள்ளே ?” "அது நாத்திலே ஒரு சேதிதான் ... அட்டியில்லேங்க... ஆனா, இப்பைக்கு ஒங்க கண்ணிலே தண்ணி துளும்பு துங்களே ? இந்தாலே, பார்த்துக்கிடுங்கங்கிறேன் !” ஈரம் கைம்மாறியது. "ஆமா, புள்ளே ; இது சந்தோசத்திலே, பூத்த கண்ணிராக்கும் ! ஒன்னை மாதிரி ஒசந்த புத்தி சத்தியும் வக்கணையான அழகும் படைச்ச ஒருத்தி இப்பிறப்பிலே அருப்புருவமாய் எனக்குப் பொஞ்சாதியாக வாய்க்கிறத்துக்குப் பூர்வ செம்மத்திலே நான் உண்டனவே புண்ணியம் செஞ்சிருக்கத்தான் வேணும்னு களிச்சுப்போன நேரத்திலே எனக்குக் கண்ணு ரெண்டும் கலங்கியிருக் கோனும் ! புண்ணியவதியான ஒன்னோட தாலி பாக்கியப் பலத்தினாலேதான் ஆத்தா எந்தலையிலே தீர்க்காயுசுக்கு எழுதிப்போட்டு, எம்பூட்டுக் கொடுப்பனைப் பாக்கியத்துக்கு ஒரு அருத்தமும் ஏற்பட்டாக வேணும் , ஆமா, புள்ளே ” தாபமும் தாகமும் சுழித்திட்ட மன உணர்வுகளுக்கு மத்தியில் வீரமணி பச்சைப் பாலகன் மாதிரி தேம்பித் தேம்பி அழுதான், கை ஈரத்தைச் சோதித்தான் ; ஈரம் எங்கே தேசாந்தரம் பறிந்தது ? .