பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 சுந்தரி உள்ளார்ந்த தேறுதலுடன் பொன்சிரிப்புச் சிரித்தாள் - காலையில் கங்காணித் தோட்டக் கேணி யடியில் காணாமல் போயிருந்த அவள் உயிர் இப்போதுதான் அவளிடம் தி ரு ம் பி விட்டிருக்க வேண்டும் ! - மச்சானே மச்சானே ! இம்மாந் தொலைக்கு எம்பேரிலே ஒரு மயமான மசக்கமும் அதை ஒட்டி ஒங்க உசிருமேலே ஒரு நாயமான நம்புதலும் கொண்டிருக்கிற நீங்க காலம்பற ஏனாம் அந்தப் பாதாளக்கேணிலலே குதிச்சுச் செத்துப் போயிட முனைஞ்சீகளாம் ?... விதிவசத்திலே நான் மட்டுக்கும் பின்னாலே கூ டி வ ந் து ஒங்களைக் கமுக்கமாய்க் காப்பாத்தலேன்னா, இந்நேரம் நான் செத்த இடமும் கூட புல் மண்டிப் போயிருக்குமுங்களே ? அப்பாலே, என்மட்டுக்கும் பொய்யாவும் கதையாவும் ஆகிப்பூட்ட என்னோட மாமன்மகன் முத்தையாவோட பேரை விளிச்சுப் புத்தி பேதலிச்சதாட்டம் நம்ம வாசலிலே கட்டிலிலே ஆடிக்கிட்டு ஒங்களைச் சமிச்சுப்புட வேணும்னு அந்த ஆள்கிட்டே மாப்பு கேட்டு எதுக்குப் புலம்புனிங்களாம் ? நீங்கதன்னடைச்ச மூப்பிலே அழுது புலம்பின அவலக்கூத்தை என்னோட நின்னுக்கிட்டிருந்த நம்ம தெருப் பொண்டுகளும் எங்க ஊர் வைத்தியரும் கேட்டுத் தெரிவிச்சிட்டாங்களே ? நாம நல்ல இருக் கிறதைக் காணச் சசிக்காமல் பொச்சரிப்புப் பட்டுகிட்டு இருக்கிற நாலுமூணு சனியன்களுக்கு மெல்லுறத்துக்கு அவல் கிடைச்சிருச்சுங்களே மச்சானே ? - நடந்த கதை நடத்திக் காட்ட மாட்டாளா சுந்தரி ? "ஊம் வாயைத் திறந்து பேசுங்க, மச்சான் !' - இடிமின்னல் ஆகிறாள் அவள். ஆனால் - 3. வீரமணி கோடைமழை ஆனான் ! - ஏபுள்ளே ஒனக்குத் தலைசுத்திக் கிறுகிறுப்பு வந்தாச்சு. நான் கண்ணை மூடுறேன், புள்ளே. .