பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஐயையோ கண்ணை மூடிக்கிடப் போlங்களா, மச்சானே ?' 'ஆத்தாடி எதுக்கு இப்படிப் பதறுறியாம் ? நான் துரங்கப் போறேனாக்கும் ! தூங்கி எழுந்தானதும், என் மனசான மனசைத் திறந்து உன்கிட்டே காட்டிப் பூடுவேன்' நெஞ்சை ஒளிச்சு ஒரு வஞ்சனை இருக்குமா புள்ளே ?” நடை வந்தது. வீர: ணக்குத் தூக்கம் வந்து விட்டது, தூக்கம் ! கதிர்க்கோமான் ஏறுமுகம் காட்டினான். மோகினிச் சிலை ஆகிறாள் சுந்தரி - வீரமணியின் சுத்தரி ! செப்பிடு வித்தையில் ஈடு எடுப்பு இல்லாததாக விமர்சிக்கப்படுகிற காலம், இடைவேளைக் காட்சி ஒன்றை மேடையிலே ஏற்றிச் சின்னக் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது ! பனங்குளத்திலிருந்து அக்கரைச் சீமை இலங்கைக்கு வயிற்றுப் பிழைப்பின் நிமித்தம் கள்ளத்தோணி ஏறிச் சென்ற மாமன் மகனான முத்தையன் தன் அத்தை மகளான சுந்தரியிடம் மனப்பூர்வமாகக் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்தபடி, முதல் கணக்கு முடிந்த கையோடு பிறந்த மண்ணை மிதிக்காததோடு, கழிந்த ஒரு மகாமகக்காலமாகவே அவனைப் பற்றிய கதை காரணம் எதுவுமே காதுக்கு எட்டாமல் போகவே, அதுவரையிலும் தர்ம நியாயமாகவே முத்தையனுக்காகக் காத்திருந்த சுந்தரியைச் சோதிக்கலானாள் அவளுடைய ஆத்தாக்காரி ! -