பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5、 வைத்தியர் சன்னாசி அம்பலம் மூச்சிறைக்க ஓடோடி வந்தார். நாடியைச் சோதித்தவர், அப்போது சுந்தரியை யும் சோதித்தவராக, உதட்டைப் பிதுக்கினார். நிற்கவோ, நிலைக்கவோ இனி நேரம் ஏது ? தலைமயிரை அள்ளிச் செருகிக் கொண்டாள் சுந்தரி. அத்தாச்சி அஞ்சலையைத் தாய்க்குக் காவல் வைத்துவிட்டு, மயங்கிய அந்தி சந்தியில் மயங்காமல் ஒட்டம் பிடித்தாள். செங்கல் காளவாய் வந்தது. இளவரசுப்பட்டம் தரித்தவனைப் போன்று கம்பீர மாகத் தலையையும் நெஞ்சையும் நிமிர்த்தி நின்ற வீரமணி கார்பார் பண்ணிக் கொண்டிருந்தான் ! முதலாளி என்றால் பின்னே சும்மாவா இருப்பாள் ? சுந்தரிக்கு மேனி நடுங்கத் தலைப்பட்டது. இடுப்புக் கொசுவத்தைச் சீராக்கிக் கொண்டாள் ; கொட்டடிச் சேலையின் முந்தானையைக் கொய்தாள் ; நெற்றிக்குக் காப்பு எழுதிப் பளிச்சிட்ட மகமாயி குங்குமத்தை காபந்து செய்து கொண்டே, வேர்வையைக் கொய்தாள். ஆத்தா மூத்தவளே ! என் ஆத்தா உசிரை ராத்திரிப் பாட்டுக் காச்சும் கட்டிக் காப்பாத்திப்புடுவீயா? - பூவரச நிழலை உதறினாள். உதிரிச் செவ்வந்திப் பூவாக நடந்தாள். வீரமணி கம்பீரமிடுக்குடன் எதிர்த்து வந்தான் ! முண்டாசு துவாலை கழுத்திலே உருமாலையாக வீழ்ந்தது! 'மைனர் சங்கிலி மைனர் வீரமணிக்கு உகந்தபான்மை யோடு அழகு காட்டியது; அழகு கூட்டியது. 'ஓ.சுந்தரி யாக்கும்... வா...ங்க... வாங்க, என்று வரவேற்பு வழங்கி னான் இளவட்டம். பார்த்த கண்களில் இனம் விளங்காத தொரு பரவசம் , கூச்சத்தோடு பார்வையைத் தாழ்த்தி னான். பட்டிக்காட்டுப் பூவையின் அழகான பாதங்களின் பெருவிரல்கள் கால் மிஞ்சிகளோடு சடுகுடு' ஆடிக்