பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கொண்டிருந்ததை அவனுடைய இளரத்தம் ரசித்திருக் கலாம் ! - அறந்தாங்கிச் செவ்வாய்ச் சந்தைக் கெடுவிலே நீங்க இங்கிட்டு நாடி வந்தப்ப ஆரம்பமான செங்கல் சூளைக் கட்டுமானம் நம்ம பக்கத்து வியாழச் சந்தைக் கெடுவான இண்ணைக்குக் விடிகாலம்பறத்தான் முடிஞ்சு நெருப்பைக் கொளுத்திப் போட்டோம் ஈசான்ய முடிக்கிலே நின்று சூளையை ஒருகடுத்தம் பாருங்களேன்!... நெருப்பு எரிகிறது.கூட எம்மாம் அந்தமாய் இருக்குது, கண்டிங்களா, சுந்தரி ?' என்று கேட்டான். அன்பிலே பண்பு பண்பாடியதோ ? நெருப்பு என்றதும், அவளுக்குச் சாவோடு போராடும் அன்னையின் ஞாபகம் தான் பீறிட்டது ; சுடுநீர் பீறிட, ஆ.மாமுங்க ' என்று தட்டித் தடுமாறினாள். சுந்தரியின் தடுமாற்றத்தை உணர்ந்ததுதான் தாமதம், வீரமணி அம்மன் தீச்சட்டியைத் தொட்டுவிட்டவன் மாதிரி சுரீர்” என்று பதறிக் கைகளை உதறினான். மேலுக்கு முடியலிங்களா ?' என்றான். 'எனக்கு ஒண்னும் இல்லீங்க ' அப்படீன்னா, உங்க தாயாருக்கு இப்ப ரொம்பவும் முடியலையா ?' வீரமணியின் மனிதாபிமானப் பதட்டம் சுந்தரிக்கு இன்ப அ தி ர் ச் சி ைய க் கொடுத்திருக்க வேண்டும் ! "என்னோட ஆத்தா நலிஞ்சு கிடக்கிற தாக்கல் உங்க ளுக்கும் தெரிஞ்சிருக்குதே ஆமாமுங்க ' என்று விடை சொன்னாள். சோகத்தில் வீரமணிக்குப் பொய்யான சிரிப்பு ஏதும் வரவில்லைதான் - "ஒங்க பனங்குளத்துக்கும் எங்க குளமங்கலத்துக்கும் கூ ப் பி டு தொலைவுதானே ?