பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 என்னோட செங்கல் யாவாரத்துக் கோசரம் நித்தம் ஆயிரந் தடவை உங்க குடியிருப்பு வழியிலே தானே நான் போய் வந்துக்கிட்டிருக்கேன். இனம்புரியாத நம்பிக்கையின் ஆதரவிலும் ஆதாரத் திலும் நல்ல மூச்சைப் பிரித்தாள். கன்னிப்பூ - "தலைக்குமேலே வெள்ளம் போயிட்ட இக்கட்டான ஆபத்திலே ஆப்புட்டுக்கிட்டுத் தவிச்சுக்கிட்டு இருந்தப்ப ஒங்களோட யாபகம் வரவே, தேடி வந்தேனுங்க 1'ஆறாத்துயரத்தை ஊடுருவிச் சுந்தரமாக முறுவலைச் சேர்த்தாள் சுந்தரி, "உங்களைக் கண்டதும், தெய்வமே தேடி வந்தாப் பிலேதான், எம்மனசுக்குப் பட்டுச்சுங்க !’ "மெய்யாலுங்களா ?” "மெய்தானுங்க; காலங்கெட்ட கலிகாலத்திலே, பொய் பேசுறத்துக்குப் பழகாத - பழக ஒப்பாத வனாக்கும் நான் !' 'அந்த நல்ல துப்பு எனக்கு நல்லாவே தெரியுமுங்க. உங்க ஊர் நாட்டிலே வாழ்க்கைப்பட்டிருக்கிற என் கூட்டுக்காரி செம்பகம் உங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப ஒசத்தியாவும் பெருமையாவும் நொடிக்கு நூறு வாட்டி சொல்லக் கேட்டு மனசு குளிர்ந்திருக்கேனுங்க!” அப்படிங்களா ? அ து வு ம் என் பாக்கியம்தான், சுந்தரி !' கைந்நொடிப் பொழுதுக்கு நாணிக் கண் புதைக் கிறாள் கன்னி கழியாப் பூஞ்சிட்டு. சுயப் பிரச்சனையை மீட்டுக் கொண்டதும், கண்ணாடி வளையல்களோடு அவளுடைய பூவிரல்கள் சல்லாபம் செய்தன. தலையை