பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 உயர்த்துகிறாள். அவளுடைய நேர்கொண்ட பார்வை' இனிய நற்கனவிலே மெய்ம்மறந்திருந்த அவனுடைய பாசமானதும் நேசமானதுமான பார்வையை ஊடுருவு கிறது!- அண்ணலும் நோக்க, அவளும் நோக்கினாள்!மதிலைச் செல்வியாகவே ஆகிவிட்டிருப்பாளோ ?-' 'திற்கவோ, நிதானிக்கவோ நேரம் கிடையாதுங்க. அவசரத்திலே இங்கே நான் ஒட்டமாய் ஒடியாந்ததே, உங்கக்கிட்ட க்க ஒரு சங்கதியைக் கேட்கவும் சொல்லத் தானுங்க', என்று தயங்கினாள் சுந்தரி, 'மேளதாளத்தோட கேளுங்க சொல்லுங்க!” மேளதாளத்தோடே கேட்கட்டுங்களா ?” ఫ్రా !" "மேளதாளத்தோடவே சொல்லிப்புடட்டுங்களா ?” "ஐ'ம் !’’ சுந்தரி சொல்லத் தொடங்கினாள் ; 'ஒங்களோட மனசான மனசைத் தொட்டு ஒங்களுக்கு முந்தானை விரிக்கக் கூடிய நல்ல எழுத்து எழுதிப் போட்டிருக்கிற நல்ல பொண்ணுக்காக நீங்க இன்னமும் காத்துக்கிட்டு இருக்கிறதாகச் சுற்று வட்டத்திலே பேசிக்கிடுறது எனக்கும் தெரியுமுங்க, அம்மாங்கொத்த வைராக்கியமான மனசு கொண்ட ஒங்ககிட்டே விதி கணக்கிலே ஒரு கேள்வியைக் கேட்டுப்புடத்தான் நான் இப்ப வந்திருக்கேன் -என் நிலைமை என்னைச் சோதிச் சிடுச்சு இப்ப நான் ஒங்களைச் சோதிக்கிறேன் :ஒங்களைச் சோதிக்கக் கூடிய அளவுக்கு எனக்கு எப்படித் துணிச்சல் வந்திருச்சின்னு நீங்க ரோசிக்கலாம் -ஒரு தக்கம் நீங்க உருமப் பொழுதிலே மரத்தடியிலே குந்தி