பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சோறு உண்ணுக்கிட்டு இருக்கையிலே பிச்சை கேட்டு வந்த நடுத்தெரு நாராயணனையும் ஆமாங்க. நம்ம பாரதக் குடிமகனையும் உங்ககூட சமட்டியாக் குந்தவச்சு உங்க சாப்பாட்டிலே பங்கு வச்சு அந்த ஏழையோட பாவப்பட் பசியை ஆத்துனிங்க! இப்படிப்பட்ட நல்ல மனசு கொண்ட நீங்க பாவபுண்ணியத்திலேயும் நம்பிக்கை உள்ளவங்க ளாகத் தான் இருக்கோணும். பாவப்பட்ட என்னைக் கண்ணாலப் பொண்ணாய்ப் பார்க்க வேணுமிங்கிற கடைசி ஆசையோடே அங்கே என்னைப் பெற்ற ஆத்தா சாசக் கிடக்குதுங்க : இப்படிப்பட்ட இடுசாமத் திலே, நான் மாப்பிள்ளைக்கு எங்கே போவேன் ? ஏங்க! ஒங்களோட நல்ல மனசை என்னாலே தொட முடிஞ்சதுங் களா ? ஆயிரம் பாவத்துக்கு நடுவிலே ஒரு புண்ணிய மாய் அமைஞ்சு, என்னோட ஆத்தா கண்பார்க்க நீங்க என்னைக் கண்ணாலப் பொண்ணாக ஆக்க ஒப்புவீங் களா ? சொல்லுங்க, தர்மராசாவே, சொல்லுங்க!” விம்மி வெடித்தவளாகக் கைகூப்பிக் கும்பிட்டாள் சுந்தரி. மறுஇமைப்பில், தன் கைகளிலே நூதனமான ஈரத்தின் இனிய தீண்டுதலை உணர்ந்ததும், திடுக்கிட்டு உயிர்த்துடிப்புடன் துடிதுடித்தவளாக ஏறிட்டு விழித் தாள். அருமைபெருமையான வீரமணியின் அன்புப் பிடியில்தான் கட்டுண்டுக் கிடந்த சிதம்பர ரகசியத்தைப் புரிந்து கொண்டதும், "மச்சான்ே!' என்று வீரிட்டாள். 'எனக்கிண்னு ஒரு தெய்வத்தை நான் கண்டுக்கிட் டேனுங்க : இனிமே நான் மட்டுமில்லே, என்னோட ஆத்தாக்காரியுங்கூடக் கொடுத்துவச்சவதானுங்க!' பாடுபட்டுச் செருமலை அடக்கிக் கொண்டான் வீரமணி. - ஏ, புள்ளே ! உன்னைப் பத்தி உன்னை விடவும் நான்தான் ரொம்ப ரொம்பத் தெரவிசாப் புரிஞ்சு வச்சிருக்கேனாக்கும் எம்புட்டு மனசான மனசுக்குத் தேடிவந்த ஒன்னை நானே தேடி வரத்தான்