பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 நல்லபொழுதுக்காகத் தவம் கிடந்தேன், ஆனா, தெய்வமே ஒரு மனுசனைச் தேடி வந்தாப்பிலே, நீயே என்னைத் தேடி வந்திட்டே !... ஊம், கிளம்பு, உன் வீட்டுக்கு ' உணர்ச்சி வசப்பட்டு விம்மினான் வீரமணி. "மச்சான்காரவுகளே ! இன்னொரு முக்கியான சங்கதியையும் இந்த நல்லவேளையிலே உங்ககிட்டே நெஞ்சுக்கு வஞ்சனை பண்ணாம உடைச்சுச் செப்பிப் புட்டா, எம் மனசு லேசாகிப்பூடுங்க நா தழதழக்கத் தவித்தாள் சுந்தரி.