பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 விரமணியின் வலது கண்ணும் வ ல து தோளும் துடிக்கின்றன. சுந்தரிப் பொண்ணே ! நீ இப்பைக்கு என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும் ! உசிருக்கு உசிரான உன்னோட மாமன் மகன் முத்தை யனுக்காக பார்வதி தேவி கணக்கிலே நீ இம்மாங்காலமும் ஒத்தைக் காலிலே தவசு பண்ணிக்கிட்டிருந்த மகராசி நீ என்கிற சத்தியத் தருமத்தை நம்ம அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க சகலத்தனை பேருமே அறிவாங்களே ? . என்றான். கொடுவாள் மீசை மாவீரன் வேலுத்தம்பிக்குத் தானே அடையாளம் ?-அது ஆண்மையோடு சிரித்தது. இடைமறித்தாள் சந்தரி!- “வார விதி ராத்தங்காது அப்படின்னு பேசிக்கிடுறது நம்ம ஊர் நாட்டிலே வளமை ! - என் ஆத்தாக்காரி என்னை வினையாய்ச் சோதிக்கத் துணிஞ்ச நேரம் வரையிலேயும் என்னோட மாமன்மகன் முத்தையன் என் நெஞ்சிலே உயிரும் உடம்புமாய்க் கோயில் கொண்டிருந்தாங்க. ஆனா, இப்ப... இப்ப என்னோட ஆசைமச்சான்-நேசமச்சான் முத்தையன் கதையாகிப் பூட்டாங்க ...” இளைய மார்பகத்தைச் சன்னமாக அந்தரங்கமாகவும் தடவிக் கொடுத்தபின், தொண்டையைக் கனைத்துக் கொண்டே, ஒரு புனிதமான, புத்தம்புதிதான வாழ்க்கைவேள்வியை மகாநோன் பின் பயபக்தியோடு பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்குவதற்கான நம்பிக்கையோடும் உறுதியோடும் பேச்சைத் தொடர்ந்தாள்; தொடர்சேர்த்தாள். ம்...ம்... ஒங்களைத்தானுங்க ... ஆயிமகமாயி எனக் கின்னு எந்தலையிலே எழுதி வச்சிட்ட ஒரு ஆம்பளையைத் தெய்வமாகக் கண் டு க் கி ட் ட கொண்டாட்டத்தைத்