பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சுந்தரிக்கு மனம் அடித்துச் கொண்டது. மகமாயி ! கூத்து இப்பத்தான் தொடங்கியிருக்குது ; அதை நல்ல தனமாய் நடத்தி முடிச்சு வச்சுப்புடுடி, மகமாயி இமை கள் நனைந்தன, * சொக்காயிக் கிழவி தொடுத்த கண்களை எடுக்காமல் இன்னமும் வீரமணியைத் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். கண்ணிர் முத்தங்களிலே மாயமந்திரம் மாதிரி புன்சிரிப்பு மலர்கிறது - ஆத்தாடி அது ... அது ஒன்னோட மாமன் மகன் தானே ? புதிய உத்வேகம் விசாரணை செய்தது. சுந்தரி உயிர்க்கழுவில் ஊசலாடியவளாகப் பதை பதைக்க வீரமணியை நோக்கினாள். மறுகிய பார்வையில், வைத்தியர் சன்னாசி அம்பலத்தின் கைஜாடை சிக்கியது. சிக்கெனப் பிடித்துக் கொண்டாள். ஆமா, ஆத்தா ஆமா !” என்றாள். கிழவி நடுங்கும் கைகளை நடுங்காமல் குவித்தாள். எச்சில் துப்பிக் காயும் நேரத்தில் மறுபேச்சாடாமல், நிம்மதியாகக் கண்களை மூடிக் கொண்டு துரங்க ஆரம்பித்து விட்டாள் - அது உடலின் துயில் ! - உயிரின் துயில் அல்லதான் ! மகமாயிக்கு விளையாடவும், விளையாட்டுக் காட்டவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. விசுக்கென்று விரைந்து கிழவியை, நலியாமல் சோதித்து ஆறுதலாகப் பொக்கைவாய்ச் சிரிப்பைக் காட்டிக் கை காட்டி அழைத்ததன் பேரில் சுந்தரியும் வீரமணியும் நாட்டுவைத்தியரை அண்டினார்கள். அம்பலம் சொன்னார் :