பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் தாலி! g அரிசிக் கலயத்தில், சாத்திரத்திற்காக வேனும் மணி அரிசி மிச்சம் மீதம் இருக்காதா ? ... செல்லிக்குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது ; ஆத்திரம் ஆத்திரமாகவும் வந்தது. பட்டுத்தெறித்துச் சுட்டுவிட்ட சுடுநீர்ச் சொட்டுகள் அவளுக்கு மீண்டும் சுயப்பிரச்சினையை உண்டாக்கியிருக்கலாம். சரிந்து கிடந்த சுங்கடிச் சித்தாடையின் 'மாராப்பு இப்போது சீரடைந்தது; வேர்வைதான் சீரடையவில்லை. வெயில் வெட்டரிவளாகப் பள்பளக்கிறது; சுள்ளாப் பாக உறைக்கிறது. ஒட்டிக்கிடந்த நெடுமூச்சை நெட்டித் தள்ளினாள் அவள். வி லா க் கு ைட வலிக்க, முள்ளந்தண்டு நோவெடுக்க, குந்தின இலக்கிலேயே, சீனிப்புளிச் 'சாம்பான் சாமி மாதிரி எத்தனை நாழிதான் குந்தி யிருப்பாள் ?- பாவம் ! பாவமும் ஆச்சு ; புண்ணியமும் ஆச்சு ஊம் ' பாதங்களை ஒரு தப்படி நகர்த்த முயன்றாள் சுரீர்” என்ற உணர்வு கபாலத்திற்குப் பாயவே, ஆத்தா' என்று கூப்பாடு போட்டாள். எட்டாக் கையிலிருந்த ஈயக்குவளையை எட்டி நகர்த்தி விட்டபோது, அவளுக்கே உரித்தான கருவக்களி அவளையும் அறிந்த விதத்தில் கண்களிலும் உதடுகளி லும் ஊடாடியது. மேனியின் சதைப்பிண்டங்கள் முழங் கால் சட்டையில் உராய்ந்தன. நயந்தநாணம் அழகான அரிசிப்பல் இடுக்கிலே கண்பொத்திக் கொண்டிருக்க