பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 'மகமாயி மகாஒசத்தியான விளையாட்டுக் காரின்னு உலகம் பேசுறது பொய்க்குமா ? என் கைவாகனத்திலே பாடஞ் செஞ்சு கிழவிக்குக் கொடுத்த புதுச் சூரணம் வேலை செஞ்சிருக்கு"; அதனாலே, அவகளோட நாடி இப்ப கொஞ்சத்துக்குக் கொஞ்சம் அமைதியாய்ப் பேசுது. இதெல்லாம்கூட நம்ம குலதெய்வத்தோட விளையாட்டுத் தான் இல்லாங்காட்டி, அக்கரைச் சீமைக்குப் பறிஞ்ச; நம்ம ஊர்த்தம்பி முத்தையா இம்புட்டுக் காலத்தைத் தாண்டியும் இங்கிட்டு வராததாலே, அது கதையாக ஆகிப்பூட்ட .ே வ ைள .ெ க ட் ட வேளையிலே ஊரெல்லாம் தங்கக் கம்பின்னு பேரெடுத்த நம்ம குளமங்கலம் வீரமணித் தம்பியை மு த் ைத ய ன் னு கிழவியாலே மனசாலே நினைச்சிருக்க வாய்க்குமா ? இல்லே, நினைச்சதை மனசொப்பி நம்பியிருக்கத் தான் ஏலுமா?... கிழவி உசிருக்கு நாளை வெள்ளிக் கிழமை பகல் பொழுது மட்டுக்கும் முக்காலறுப்பு எந்த ஆபத்தும் வந்துப்புடாது! - அதுக்குள்ளாற, ஆத்தாக்காரியை நிம்மதிப்படுத்த வேண்டிய காரியங்களை சட்டுப்புட்டுன்னு சுந்தரிப் பொண்ணு செஞ்சு முடிச்சுப் புடுறது நல்லதாக்கும் தவிரவும் நம்பி குளமங்கலம் வீரமணி நாளைக்கு முச்சூடும் பனங்குளம் முத்தையனா கவே இருந்தாக வேண்டியதும் அவசியமாக்கும்!” "சரிங்க, ஐயாவே' ஒரே குரலில் சுந்தரியும் வீரமணியும் சம்மதம் வழங்கினார்கள். 'பெரியவுகளே ! நாளை நிலம் தெளிஞ்சதும் எனக்குக் கண்ணாலமுங்க , ஆத்தாக்காரி என்னைக் கண்ணாலப் பொண்ணாக் காணவேணும்னு கடைசி நேரத்திலே ஆசைப்பட்டதை நான் ஆசைதிர நிறை வேத்தி வைக்கப் போறேன் ! இந்தப் பாவியை ஒரு புண்ணியவதியாக ஆக்கி என்னை ஆட் கொண்ட சாமீ...