பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கண்கண்ட என்னோட சாமி...சாமி. இந்த மச்சான் காரவுகதானுங்க - சுந்தரி ஆனந்தமாக விம்மிச் சிரித்தாள். 'தான் நினைச்சது சரிதான் ! தங்கச்சி, நீ ரொம்ப ரொம்பக் கொடுத்து வச்ச பொண்ணுதான் !' - வைத்தியர் மனம் விட்டுச் சிரித்தார். 'நானும் கொடுத்து வச்சவன் ; அதாலதான், நான் சுந்தரித் தங்கத்தை எடுத்துக்கிடப் போறேனுங்க :’’ விரமணி ஆனந்தமாகச் சிரித்து விம்மினான். வெள்ளிக்கிழமை, நிலம் தெளிகிறது. பனங்குளத்துக்கும் குளமங்கலத்துக்கும் எல்லை சொல்லிப் பொதுக் காவல் தெய்வமாக விளங்கிய திரிபுரசுந்தரியாம் மகமாயித்தாயின் திருச்சந்நிதானம். தூப தீபாராதனை நடந்தது. கெட்டிமேளம் முழங்குகிறது. ஆணழகன் வீரமணி, பெண்ணழகி சுந்தரியின் தங்கக் கழுத்திலே தங்கத் தாலி கட்டி, மூன்று முடிச்சுக்கள் இட்டான். திருமண மலர்மாலைகள் மணம் சூழ்ந்து எக்காளமிட்டுக் குலுங்கிட, வீரமணி - சுந்தரி ஜோடி தம்பதி சமேதராக ஆயி மகமாயியை மகிழ்ச்சிக் கண்ணிர் பொங்கி வழிந்திடக் கைகூப்பிச் சேவித்தனர். வி-5