பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பின்னர், ஆலமரத்தடியில் வீரமணியின் அழகான பெட்டி வண்டியில் திண்டுகளிலே சாய்ந்திருந்த மூதாட்டி சொக்கியின் சந்நிதியில் இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டனர். உணர்ச்சிப் பெருக்கி திக்குமுக்காடி விம்மினாள் சொக்கி ! - ஆத்தாளே சுந்தரி நீயும் உன் மாமன் மகனும் லோகத்திலே இருக்கிற பதினாறு சுகமும்பெத்து நீங்க ரெண்டு பேரும் நகமும் சதையுமா மகராசி தயவிலே ரொம்ப ரொம்பக் காலத்துக்கு அமோகமா வாழவேணும்! ஆயி மகமாயி என் நெஞ்சிலேயும் பால் வார்த்துபுட்டா! இனி நான் பிழைச்சுக்கிடுவேனாக்கும் - கைகளை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தாள் புதுமணத்தம்பதி இருவரும் ஏன் அப்படிச் சிலையாகி விட்டனர் ? ‘இனி நான் பிளைச்சுக்கிடுவேனாக்கும்னு கிழவி சவால் விடுதே ? நடந்த பொய்க் கூத்து சொக்கிக்குப் புரிஞ்சிடாதா ? வீரமணிதான் முத்தையன் அப்படின்னு சாதிக்கும்படி ராத்திரி சுந்தரிக்குச் சாடைகாட்டிய நான் பாவி ஆகிடமாட்டேனா ? - வைத்தியர் சன்னாசி கைகளைப் பிசைந்தார். ஆனா ஒண்னு வீரமணியைப் பார்த்து முத்தையன்னு நம்பினதாலே தான் கிழவி இந்த மட்டுக்காச்சும் உயிர் பிழைச்சுதாக்கும் ! ?- மனத்திற்குச் சமாதானம் செய்துகொண்டார். ஆபத்திற்குப் பாவம் இல்லைதானோ ? அளந்தாள். சிந்தனை வசப்பட்டிருந்த வீரமணியின் நிழலில் ஒண்டினாள். ஏங்கறேன் ; நீங்க எதுக்கும் மனசைப் போட்டு உளப்பிக்கிடாதீங்க. என்னோட ஆத்தாக்காரி நல்லாப் பொழைச்சிக்கிட்ட டியும், நானே சுந்தரி அர்த்தமுள்ள பார்வையால் தன் புருஷனை