பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 நடப்பைப்புட்டு வச்சு அதுக்கிட்டே மாப்புக் கேட்டுக் கிடுவேனுங்க ' என்றாள். அதுபோலவே, வைத்தி யரிடமும் பேசினாள். வீரமணியின் மச்சுவீடு பாளயக்காரர் வீடு மாதிரி அமர்க்களப்பட்டது. ஆறு தலைக் கட்டுக்காரர்களும் பம்பரமாகச் சுழன்றார்கள். ஊர் விருந்து ராஜமரியாதையோடும் ராஜோ பசாரத் தோடும் நடந்தது. சுந்தரியைப் பெற்றவள் ஒரு லோட்டா சேமியாப் பாயசத்தை ஒரே மடக்கில் குடித்தாள் ! இரவு சாந்தி முகூர்த்தம் நடந்தது : மறுநாள் விடிந்ததோ இல்லையோ?- கிழவி சொக்கியின் உயிர் வடிந்தது ஜீவன் பிரிந்தது ! கோடை இடியின் முழக்கமாக இருமல் சத்தம் ஒலிக்கவும் எதிரொலிக்கவும் கேட்ட சுந்தரி உயிர்க் கழுவிலே துடியாய்த் துடித்தவளாகத் திடுக்கிட்டு ஏறிட்டு வீழ்ந்தாள். மீண்ட சுயப் பிரக்ஞையிலே, மேடையேறிய இடைவேளைக் கண்ணாமூச்சி நாடகம் பாதியில் நின்று விட்ட துப்பு அவளுக்குப் பிடிபடாமல் இருக்குமா ? 'மச்சானே ஏந்திருச்சி முஞ்சி கழுவி விபூதி இட்டுக் கிட்டு வந்து குந்துங்கங்கிறேன்!- பத்தியக் கஞ்சி குடிச்சுப் பூடலாம்!” என்றாள். மூச்1- விரமணி திரும்பவும் தூக்கம் என்கிற சொர்க்கத்திற்குத் திரும்புகிறான் - ஒருவேளை, பூர்மான் கும்பகர்ணனிடம் வரம்பெற்றிருப்பானோ ?