பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 உண்மையாகவே இருக்க வேண்டும் 1. அப்படியென்றால், விதியும் உண்மைதானா ? முந்தா நாள் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடத்துக்குப் பின்புறம் இருந்த பொட்டல் வெளியில் அடுத்த செங்கல் சூளையை அமைக்கத் திட்டமிட்டு, அதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு, அறந்தாங்கிச் செவ்வாய்ச் சந்தைக்கு ரேக்ளா வண்டியில் புறப்பட்டான் வீரமணி. காலையில் பத்து நாழிகைக்குக் கிளம்பினவன் வீட்டை மிதித்தபோது, அந்தி ஒளி கண் சிமிட்டிச் சிரித்தது. சுந்தரி கோணிச் சாக்கைப் பிரித்ததும், முந்திரிக் கொட்டையெனத் தலை நீட்டிய ஒட்டு மாங்காயை விசுக்கென்று கடித்தாள். முதுகுப் பக்கத்தில் கள்ள விழிப் பார்வையைச் சொடுக்கின்ற நேச மச்சானைக் கவனித்தவுடன், நாணினாள். இப்போது வயிற்றுக்கு மட்டில் சற்றே அடங்கியதும் மெய்தான் ! சுறாக்கருவாடு, தக்காளி, முட்டைகோஸ், பச்சைக் சொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய், கனகாம்பரப்பூ லாலாகடை அல்வா, சாத்துக்குடி - இப்படிச் சாமான் சட்டுகள் அணிவகுத்தன. விளை மீனும் நண்டும் அணிபிரிந்தன. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமுகமான தீர்வு கண்டு நல்லமைதியை நில நாட்டப் போவதாக அதிகார தோரணையில் சொல்லிக் கொண்டு அங்கே டேரா' போட்டிருக்கும் இந்திய அமைதிப் பாதுகாப்புப் படையினருக்கான நிகழ்ச்சிகள் ரேடியோவில் ஒலிபரப் பாகிக் கொண்டிருக்கின்றன. - 'மின்ஒளி கண்ணடிக்கத் தொடங்கியது !