பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மீன்கறிச் சாப்பாடு முடிந்தது.

வீரமணியும் சுந்திரியும் தம்பதிக் கோலத்தில் இரண்டாங்கட்டில் குந்திக் கோலாகலமாக வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர். அந்நேரத்திலே - அயித்தை மகளே ! சுந்திரிப் பொண்ணே !' கூப்பிட்ட குரலை இனம் புரிந்த சுந்தரி, இனம் புரியாத அதிர்ச்சியோடும் கலக்கத் தோடும் நெஞ்சம் பதை பதைக்கப் பாய்ந்து வந்து திட்டி வாசலில் நின்றாள் ! தருமத்தைச் சூது கவ்விக் கொண்ட மாதிரி மேகத்தில் முக்கிக் கொண்ட தேய்பிறையின் மங்கல் வெளிச்சத்தில் கூட, அந்த உருவம் சத்தியத்தைப் போலவே பளிச்சென்று காட்சியளிக்கிறது ! வைத்த விழிவாங்காமல் அவ்வுருவத்தையே சுந்தரி பார்த்தாள்; பார்த்தாள்; பார்த்துக் கொண்டே இருந்தாள். 'ஆ நீங்களா ? நீங்களே தா னா ! மெய்யாலுமே என்மாமன்தானா ? . சத்தியமாவே நீங்க நீங்க... என்னோட மாமன்மகன் முத்தையாதானா **, விம்மி வெடித்திட விதியாகக் கேட்டாள். 'அயித்தை மகளே ... நான், நான் உண்மையாகவே உன் மாமன் மகன்தான் ! ... சத்தியமாகவே, நான்... உன்னோட மாமன் மகன் முத்தையனேதான் ! உன் மாமன் மகன் இன்னம் செத்துப் போயிடல்லே, அயித்தை மகளே !' . சாட்சாத் முத்தையனேதான் பேசினான். புன்னகை செய்தவனாகவே பேசினான்; உந்திக்கமலத்தினின்றும் ஈரக் கசிவோடு கனிந்த புன்சிரிப்பு அல்லவா அது ? -