பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 i ஆனாலும், அவனையும் மீறிய சோகம் அவன் பேச்சில் அடிநாதமிடத தவறிவிடவில்லைதான் கட்டபொம்மன் மீசை மிடுக்கோடு துடுக்காகத் துடித்தது ! "ஆத்தாளே’! - வீரிட்டாள் சு ந் த ரி தங்கத்தாலி ஊஞ்சலாடியது அவள் மறுபடி தன் மாமன் மகளை ஏற இறங்கப் பார்த்தாள் பார்வையிட்டாள் ! ஐயையோ ... முத்தையனின் வலது கையும் இடது காலும் எங்கே? சுந்தரிக்குத் தலை ஆ ல வ ட் ட ம் சுற்றியிருக்க வேண்டும் தரையிலே சாயப்போனவளைப் பதட்டத் தோடு பாய்ந்து வந்து சாமர்த்தியமாக ஏந்தித் தாங்கிக் கொண்டான் வீரமணி. பிறகு அவளைத் தோள்களில் சாத்திப் பதனமாகத் துரக்கிக் கொண்டுபோய் வெளி வாசல் திண்ணையில் கிடத்தினான். மறுநொடியிலே வாசலுக்கு வந்து நின்றான் ; பாதாதி கேசமாக முத்தை யனைப் பார்த்ததுதான் தாமதம் ; அவனது கண்களில் ஆடிப்புனலாகக் கண்ணிர் ஒடியாடி வழியத் தலைப் பட்டது. பாசமும் பச்சாத்தாபமும் பீறிட, 'முத்தையா அண்ணாச்சி !’ என்று விளித்து, ஊன்று கோலின் உறு துணையோடு தடுமாறிக் கொண்டிருந்த முத்தையனை அப்படியே நெஞ்சோடு நெஞ்சாக அனைத்துக் கொண்டான் வீரமணி கயிற்றுக் கட்டிலை நகர்த்திப் போட்டு, 'இங்கிட்டுக் குந்துங்க' என்று உபசாரம் செய்தான். முத்தையனுக்கு அனுசரனையாகத் துணை இருந்து, அவன் க ட் டி லி ல் வசதியாக உட்காரவும் உதவினான். கைப்பிடிக்கழியையும் அழகான, பெரிய பிரயாணத் தோல் பையையும் அவன் காலடியிலேயே வைத்தான் வீரமணி. பிறை நிலவும், வீசு தென்றலும் அப்போது அங்கே விதியோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தனவோ