பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 என்னவோ? ஒரு வேளை, அங்கே அப்போது உருவாகி யிருந்த திடீர்த் திருப்பக் காட்சியைப் பார்வையிடத் தான் விதி விஜயம் செய்திருக்கலாமோ ? உயிருக்குத் துணை ஆனவளை அண்டினான் வீரமணி. முத்தையன் லேகமாகக் கண்ணிரைத் துடைத்துக் கொள்கிறான். சலனம் கண்ட வனாகத் திரும்பினான் வீரமணி. *முத்தையா அண்ணாச்சி !' என்று என்னவோ சொல்ல வாயெடுந்தான். அதற்குள் குறுக்குச் கால் ஒட்டினான் முத்தையன், "என் பேர் கூட உங்களுக்குத் தெரிஞ்சிருக்குதுங்களே ?” என்று என்னவோ ஒரு நப்பாசை துள்ளக் கேட்டான். 'உங்க பேர் - அன்பான உங்க பேர், உங்க முகம் அறியாமலே, எனக்குப் பதினெட்டு, பத்தொன்பது மாசத் துக்கு முன்னாடியே தெரிஞ்சுபோச்சுது ; முகம் அறிஞ்ச துக்கு அப்புறம், மறந்துபோயிருந்த உங்க பேர் இப்ப என் நினைப்புக்கு வந்திருச்சு , என்னைக் கட்டிக்கிட்ட சுந்தரி, அதாங்க, உங்க அயித்தை மகள் சுந்தரி உங்களை எதிர் பார்க்காமல் கண்படியும் பேயைக் கண்ட மாதிரி கதிகலங்கி "நீங்க மெய்யாலுமே என் மாமன் மகன் முத்தையனே தானா ? அப்படின்னு கேள்வியும் எதிர்க் கேள்வியும் கொஞ்சம் முந்தி கேட்டதையும் நான் கேட்டுக்கினுதான் நின்னேன் ? ...' மகிழம் பூக்களின் வாசம் திடீரென்று காற்றில் அலை கிறது. "ஓ அப்படியா ? சரிங்க !' - குரல் தடம் மாறி யிருக்கலாம் ; மரத்துப்போய் விட்டிருந்த வலது காலுக்கு உணர்வூட்டத் தடவிக் கொடுத்தாள். அங்கிருந்து