பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 விடைபெற்றுப் புறப்படத் தவித்துக் கொண்டிருந்தான் முத்தையன். வீரமணி சாமான்யப்பட்ட புள்ளி அல்லதான் ! அவனுக்கு ஊகம் தெரியும். 'அண்ணாச்சி, அந்தாலே உங்க அயித்தை பொண்ணு மசக்கம் தீர்ந்து ஏந்திருச் சிருச்சு ; கைகழுவத் தண்ணி கொண்டாரேன். சுந்தரி கெண்டை மீன் குழம்பு வக்கணையாய் ஆக்கியிருக்குது ; சோறு உண்ணுப்புட்டு அப்பாலே, சுமையும் சோதனை யும் தீரப் பேசலாமுங்க ' என்றான். எவ்வளவு நல்ல வனாக இருக்கிறான் இந்த நல்ல மனிதன் ! முத்தையனுக்குச் சிரிப்பு வரமறுத்திருக்க வேண்டும். “எனக்குப் பசிக்கல்லீங்க, வீரமணி,' என்றான், வீரமணிக்குச் சுருக்கென்றது. நெருஞ்சிமுள் தைத் திருக்கக் கூடும். நெஞ்சைத்தடவிவிட்டான். உங்களுக்குப் பசிக்கல்லே என்கிறது நாயம்தான் ; பசிக்கவும் பசிக்காது தான். ஆனாலும், விருந்தாளியான உங்களைக் கை நனைக்காமல் விட்டுப்புடமாட்டேனுங்க ! இந்த வீரமணி .ெ சா ன் னா ல் சொன்னதுதானாக்கும் ! பேசினான் இளஞ்சிங்கம் ; கொடுவாள் மீசையை நீவி விட்டான். முத்தையனின் நெஞ்சம் புலம்பியது : துடித்தது : தவித்தது. "நம்ம தமிழ்மண்ணை என்னோட்ட ஒற்றைக் கால் மிதிச்சதும், நான் முகம் கொடுத்துப் பேசின முதல் ஆசாமி எங்க ஊர் வைத்தியர் சன்னாசி அம்பலம் தான் ; அவர் உங்களைப் பத்தி ரொம்பவும் பெருமை யாய்ச் சொன்னாருங்க ; அப்பாலே...! அவன் பேச்சை நிறுத்தவில்லை,

  • மச்சானே!'