பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வேண்டும். கண்ணாமூச்சி விளையாட்டென்றால், கஞ் சிக்குப் பச்சை மிளகாயைக் கடித்துக் கொள்கிறமாதிரி தான் ! - நல்ல காலமாக, ஒரேயொரு மிடறுக்குக் காணும் படியாகக் தங்காணிக் கம்மாய் நல்ல தண்ணிர் மிஞ்சியிருந்தது அலைக்கழிந்த - அலைக்கழிக்கப்பட்ட ஆசையோடு ஆசையாக அள்ளித் தெளித்துக்கொண்டாள்! 'ஊம் கருக்கலிலே குடிசையை விட்டுப் பிறிஞ்ச ஆத்தாளை இம்மாம் பொழுதுக்கும் கண்ணுப் புறத்திலே கான வாய்க்கலையே போன சங்கதி என்னா ஆச்சோ?நெடுமூச்சு பூராகமென நெளிகிறது. என்னவோ கசமுச'வென்று சத்தம் கேட்டது. முழங்காலில் கையை முட்டுக் கொடுத்துக் கொண்டே எழுந்தாள் செல்லி, கொட்டடி ரவிக்கையின் அடிமுடிச்சு அவிழ்ந்து தொலைத்தது. ஆசையின் இனிய சொப்பனங் கள் எப்படியெல்லாமோ சிலிர்த்தன ; முடிச்சுப் போட்டுக் கொண்டு, தலையைத் தாழ்த்தியவளாக, எட்டடிக் குடிசை விட்டு வெளிப்புறத்திற்கு வந்தாள். கூப்பிடு தொலைவிலே, கூப்பிடாமல் நின்றிருந்த அந்த ரேக்ளா அவள் நெஞ்சிலே தங்கரதமாகச் சுழன்றது. 'ஆத்தாளே அங்காளம்மே!’- பசி என்னமாகப் பிராண்டித் துளைக்கிறது :- சின்ன எசமான்:- கன்னிப் பூ மெய்ம் மறந்தாள். பசி போன இடம் தெரியவில்லை! சாம்பான் சாமித் திடலில் இப்போது ஆளும் பேரு மாகக் கூட்டம் தெரிந்தது. நெளிந்தது. அவளுக்குப் புரியாமல் இருக்குமா P ‘அடியே செல்லியோ !” - “என்னாடி, வள்ளி ?”