பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கெட்ட சொப்பனம் கண்டவளாகப் பத்றி எழுந்து வந்த சுந்தரி, இடது கை அக்குளுக்குள் அணைகொடுத்துத் துணை நின்ற ஊன்று தடியைத் தாங்கிப் பற்றிக் கொண்டே எழுந்து நின்ற முத்தையனைப் பார்த்ததும், மறுபடியும் ஒலமிட்டாள் "மச்சானே! அது. அது... அவுக நெசம்மாவே என்னோட மாமன் மகன் முத்தையா தானுங்களா ?” உருக்குலைந்து உருகினான் வீரமணி "ஆமா, புள்ளே, ஆமா! - இவுக உன் மாமன் மகன் முத்தையனேதான் !' என்று அழுத்தம் திருத்தமாகச் செப்பினான். கண்ணிருக்குக் கரை உண்டுதான் :கறையும் உண்டுதானோ ? விழிகளே வெள்ளம் பாய்ந்திட ஏறிட்டு விழித்தான் முத்தையன் !- "அயித்தை மகளே ! நான் இனிமேலே செத்தால்தான் உண்டு !'-அவன் சத்தியம் பறைந்தான்! உணர்ச்சிகளின் சுழிப்பில் சிக்கித் தவித்துத் தடுமாறித் தத்தளித்த அபலை சுந்தரி மனமும் மனச்சாட்சியும் பதைபதைக்க, ஐயையோ என்னைச் சோதிச்சுப் பூட்டியே, ஆத்தாளே ... ஐயையோ, மகமாயி ! என்னைப் பாவி பழிகாரி ஆக்கிப்புட்டியே ?' என்று அலறினாள். . . உயிர் துடிக்கவும் கண்கள் உருகவும் தவித்த வீரமணி சட்டென்று பாய்ந்து தன் அருமைப் பெண்டாட்டியைத் தாங்கிக் கொண்டு, அவளுடைய கண்ணிரைத் துடைத் தான். அவனுடைய கண்ணிரை யார் துடைப்பதாம்:அட, பாழும் விதியே ஈவிரக்கம் இல்லாத ஒன்னோட விளையாட்டுக்கு இருந்திருந்து நாங்கதானா-நாங்க மூணு பேரு தானா ஆப்புட்டோம் ?