பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 முத்தையன் செருமினான் - வார்த்தை தவறிட்ட நான்தான் பாவியாகிப் புட்டேன் பாளத்த விதி என்னையேதான் சோதிச்சுப்புடுச்சு ... ஆமா, சுந்திரிப் பொண்ணே, ஆமா '- தீயை மிதித்துவிட்ட கணக்கில், பழங்கணக்கைப் பார்க்க நாட்டமில்லாமல், பசியை மண்டையில் அடித்துவிட்டுப் புறப்படும் வேளைக்காகத் தவித்துக் கொண்டிருந்தான் ! பூங்கரங்களை நடுநடுங்கக்குடுத்தவாறு மாமன் மகனை அண்டுகிறாள் அத்தைமகள்; குலுங்கக் குலுங்கச் செருமுகிறாள்; விம்முகிறாள்; கதறுகிறாள்; முத்தையனையும் சுந்திரியையும் மாறிமாறி - மாற்றி மா ற் றி ப் பார் த் தா ன் வீ ர ம ணி. வாய்விட்டுத் தேம்பினான். நெஞ்சுக் கூட்டை நிர்த்தாட்சன்யமாகத் தேய்த்துக் கொண்டான். மனச்சாட்சியின் வலியைத் தாளமாட்டாதவனாக மனம் விட்டு அழுதான். முத்தையன் வாய்திறந்தான். 'புருஷனும் பெண்சாதியும் இனிமேலும் அழுதால், அப்பாலே நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிடு வேன் வர்ற விதி ராத்தங்குமோ, தாங்காதோ எனக்குத் தெரியாது; அதைப்பத்தி எனக்கு அக்கறையும் கிடை யாது !ஆனாலும், ஒரு உண்மை மாத்திரம் எனக்குப் புரிஞ்சிடுச்சு 1 - ஆமா, எனக்கு நானேதான் விதி ! . நான் ராத்திரியோடவே போயிடுவேன்: அதுக்குள்ளாற உங்க இரண்டு பேரோடவும் ஆறுதலாய்ப் பேசியாக வேணும் ! -அந்நாளையிலே நான் அக்கரைச் சீமைக்குப் புறப்பட்ட சமயத்திலே ஒரு கணக்கு முடிஞ்சு திரும்பி னடியும் என் அயித்தை மகளைக் கண்ணாலம் கட்டிக் கிடுறதாக அதுகிட்டே நான் கொடுத்த வாக்கை நம்பி யும், நான் சொன்ன சொல்லை மதிச்சும், காலம் கடந் தும்கூட, எனக்காகக் காத்துக்கிட்டு இருந்திச்சு சுந்தரி !