பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அப்போ, சாகப் பிழைக்கக்கிடந்த அதோட ஆத்தாக்காரி அதைக் கண்ணாலப் பொண்ணாய்க் காண ஆசைப் பட்டுச்சு; என் கதையே முடிஞ்சி போச்சு அப்படீன்னு ஊரும் நாடும் முடிவு செஞ்சிருந்த அந்நேரத்திலே, தன்னோட ஆத்தாக்காரியோட சோதனைக்கு ஈடு கொடுக்க வீரமணியைச் சோதிச்சுது சுந்தரி! அப்புறந்தான் விதி விளையாடவும் விளையாட்டுக் காட்டவும் ஆரம் பிச்சுதாம் வீரமணியைக் கண் ட சுந்தரியோட ஆத்தாக்காரி வீரமணியை முத்தையன்னு நம்பிப் பூரிச்சுப்போச்சாம் ! நீங்க இரண்டு பேரும் உங்க பூர்வ ஜன்மப்பலத்தினாலே இப்பிறப்பிலே புருசனும் பெண் டாட்டியும் ஆனிங்க இப்படிப்பட்ட சகலத்தனை சங்கதிங்களையும் எங்க நாட்டு வைத்தியர் சன்னாசி அம்பலம் விளம்பரமாகவே விளம்பிட்டாராக்கும் ! ஆமாங்க, வீரமணி ஆமா, அயித்தை மகளே சுந்தரி !” முத்தையன் நெடுமூச்செறிந்தார் ! மெளனம் சிரிக்கிறது ! விதிக்குச் சிரிக்கத்தான் தெரியாது ? முத்தையனுக்கு நேருக்கு நேராக வந்து நின்றாள் சுந்தரி. துண்டிக்கப்பட்ட முத்தையனின் வலது கையை யும் இடது காலையும் தொட்டுக் கண்களிலே ஒற்றிக் கொண்டாள். சரிந்த மாராப்புச் சேலையைச் சரி செய்து கொள்ளவும் அவள் மறந்தாள் ! அங்கே, அப்போது கண்ணிரும், கண்ணிரும் சங்கமம் ஆயின போலும், ! . Ya * 敬仑 o