பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சீர் கொடுத்த புண்ணிய சீலனே சீர் ஆகி நிற்கை யில், சீர் ஆன இல்லத்தரசி சீர்பெற்று நிமிர்ந்து நிற்க மாட்டாளா ? - கொண்டவன் கொய்துபோட்ட சேலை முந்தானை கொண்டு, சுடுநீரைக் கொய்தாள் - 'விதி உங்க மேனியோடவும் விளயாடிச் சுங்களாங்காட்டி !' என்று புலம்பினாள் சுந்தரி, "சிங்களப் படுபாவிங்கதான் நம்ம முத்தையனோட விளையாடியிருக்கோனும் '-தமிழின உணர்வுகள் சுடர் தெறிக்க, ஆத்திர ஆவேசத்துடன் பேசிய வீரமணி கோபம் துாள்பறக்கப் பற்களைக் கடித்துக் கொண்டான். வீரமணியின் இனப்பற்று முத்தையனை உணர்ச்சி வசப்படச் செய்திருக்க வேண்டும். அரைக்கணம் மெய் மறந்து கண்க்ளை மூடிக்கொண்டான். திறந்த கண்களில் கண்ணிர் மடை திறந்தது. 'சபாஷ், வீரமணி ' - வீரமணிக்கு முத்தம் கொடுத்தான். 'நான் மட்டும் என் மாமன் மகனோட அங்கே இருந் திருந்தா, என் மாமன் மகனை இம்மாங்கொத்த அவல நிலைக்கு ஆளாக்கின சிங்களப்பேய்களை அங்கேயே கடிச்சுக் குதறி அவங்களோட ரத்தத்தைக் குடிச்சிருக்க மாட்டேனா ! ஆஹா ! வீரத் தமிழச்சிதான் சுந்தரி !