பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சுந்தரியின் திசைநோக்கிச் சிரம் தாழ்த்துகிறான் முத்தையன் ! "சிங்கள வெறிப் பயல்கள் ரொம்பக் காலமாகவே என் உயிரைப் பறிச்சுப்பிடக் குறி வச்சிருந்தாங்க |லங்கையிலே அமைதி காப்பதாகச் சொல்லி ந ம் ம இந்தியப் படைங்க அங்கே வந்து சேர்ந்ததிலேருந்து சிங்களச் சிப்பாய்களோட அநியாய அட்டுழியங்கள் அத்து மீறிப் போச்சு. போன ஜூன் கெடுவிலே திரிகோண மலை அடிவாரத்திலே எங்களைச் சிங்கள வெறியர்கள் மடக்கிக் கிட்டாங்க. எ ங் க விடுதலைப்புலிப் பட்டாளத்துக்கிட்டே அவங்க ஜம்பம் சாயுமா சகட்டு மேனிக்குச் சிங்களச் சிப்பாய்களைத் தீர்த்துக் கட்டிட் டாங்க அந்நேரத்திலே என்னைக் குறிவச்சு மூணு சிங்கள வெறியர்கள் மூனுவாட்டி சுட்டாங்க. அவங் களாலே என் வலது கையையும் இடது காலையும் மட்டுந்தான் ப றி க் க முடிச்சுதுங்க ... அங்கே நித்தியக் கண்டம் பூர்ண ஆயுசு க ண க் கி லே நித்தம் நித்தம் செத்துப் பிழைச்சுக்கிட்டு இருக்கக் கூடிய நம்ம தமிழ் மக்களுக்கு உலகறியப் பரிபூரண மான் உறவுரிமைகள் கிடைக்கிற பரியந்தம், எங்களோட தன்மானப் படைங்களுக்கு ஊன் ஏது, உறக்கம் ஏதுங்க?எங்களோட லட்சியம் உலகறிய வெற்றிபெறப் போகிற இன்ப விடுதலை நாள் இனியும் வெகு தூரத்திலே இல்லேங்க ஆனால் அந்தக் கடமையிலே பங்குபற்றிப் பாக்கியம் பெறக்கூடிய நல்ல சந்தர்ப்பத்தைக்கூட ஆண்ட வன் தட்டிப்பறிச்சுக்கிட்டு என்னை நொண்டி ஆக்கிப் புட்டானே ?... இந்நேரத்திலே நன்னி மறக்காமல் ஒரு உண்மை நடப்பைச் சொல்லிப்புட வேணும் ! - என் அன் பான தலைவர்களோட புண்ணியத்தாலேதான் நான் மூணு தக்கம் காவிலேருந்து தப்பி எப்படியோ மறுபிறப்பு எடுத்தேன் . சிகிச்சை முடிஞ்சு இருபது நாளைக்கு முந்தி நான் என்னோட பாதாளக் கூடத்துக்குத் திரும்பினதிலே