பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 யிருந்து, என் மனசே என்னைக் கொல்லாமல் கொன்னுக் கிட்டிருந்த நரகவேதனையை என்னாலே தாளவே முடியா மல் போச்சு ; கருவண்டாட்டம் என்னை அல்லும் பகலும் துளைச் செடுத்த நெஞ்சு உறுத்தல் என்னைக் கட்டாய மாய் எந்த நிமிஷத்திலேயும் சாகடிச்சிப்பிடும் என்கிற துப்பும் எனக்கு வள்ளிசாய்ப் புரிஞ்சிபோச்சு 1 ஆகச்சே, எனக்குள்ளே ஊடாடிக் கூட்டுப் புழுவாய் என்னை அரிச்சுத்தின்ன ஒரு நப்பாசையை - நயமான ஒரு நப்பாசையை எங்க தலைவர் பாருங்க காதிலே ஒரு புலரியிலே ஒதினேன் ... !” ஒரே மூச்சிப் பேசிய முத்தையாவுக்கு இருமல் வெடித்தது - மூச்சையல்ல - பேச்சை நிறுத்தினான் அவன் ! வீரமணியை முந்திக் கொண்டு அடுப்படிக்குப் போய்த் திரும்பிய பெருமைக்கு உடையவள் சுந்தரியாகவே இருப்பாள் ! - மாமன் மகனின் உ த டு க ளி ல் லோட்டோவைப் பொருத்தி மிக விழிப்போடு அருகிலே, நின்றவளும் சாட் சாத் சுந்தரியாவே இருக்க வேண்டும்!-- அவளுக்கு அதிசியமாகப் பசித்தது மறு நொடிப்பில் உயிர் போய் விட்ட பாவனையில் பதறினாள் ; மாமன் மகனே கோபப்படமாட்டிகளே ? சத்தமுந்தி திடுதிப்னு பயங்கரமாய் அடிச்ச சூறையிலே. என்னோட மூளையே குழம்பிப்பூடுச்சுங்க செத்துப் போயிட்டுப் பிழைச்சு வந்து சேர்ந்திருக்கிற விருந்தாளி ஒங்களுக்கு முதல் காரி பாய்ச் சோறு படைக்கோனுமே என்கிற சகசமான புத்திகூட இந்நேரமாத் தடுமாறிப் புடிச்சுக்கிடுங்க. நடைக்குப் பறிவோம் ; அங்கே வெளிச்சத்திலே சோறு உண்ணலாமூங்க, என்று கூறியவாறு, மாமன் மகனின் இடது கையை ஊன்று கோலோடு பற்றினாள். அந்தப் புதிய ஸ்பரிசம் முத்தையனைச் சுட்டதோ ? அதனாலேதான், நெருப்புப்பட்ட மாதிரி அதிர்த்