பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தானா ?-” எனக்குப் பசிக்கல்லே ' சிணுங்கலாச் சொன்னான். "ஒங்களுக்குப் பசிக்காது தாங்க, மாமன் மகனே!உண்ைைமச் சங்கதி ஒங்க அயித்தை மகள் எனக்கு மட்டுப்படாதுங்களா ? நம்ம சாதி சமுதாயத் தருமப் பிரகாரம் விருந்தாளி ஒருவாய்ச் சோத்தையாச்சும் வாயிலே அள்ளிப் போட்டுக்கிடவேணுமே ?” முத்தையன் குறுக்கிட்டான் 'சுந்தரி!' என்று மறுபடி விம்மியபடி, முடமான தன்னுடைய சோற்றுக்கையின் அடிப்பகுதியைக் கண்களிலே ஒற்றிக் கொண்டான். சுந்தரி உருகினாள். மாமன் மகனின் இடதுகையைத் தன் இடதுகையில் பின்னிக் கொண்டே, ‘நான் இருக் கையிலே நீங்க கவலைப் படலாமுங்களா ? நான் என்னோட சோத்துக் கையினாலே உங்களுக்குச் சோறு ஊட்டிவிட மாட்டேனுங்களா, மாமன் மகனே ?’ என்று உத்தாரணம் கொடுத்தாள். நீங்க இனி அழப்படாதுங்க; அப்புறம் என்னாலே தாளவே ஏலாதுங்க, 'என்று கெஞ்சினாள். நடந்தாள். முத்தையனின் அழகான பயணப்பை இப்போது வீரமணியை நிழலாகத் தொடர்ந்தது. மின்ஒளியின் வெட்டவெளிச்சம் நடையைப் பட்டப் பகலாக்கியது. - முகட்டுக் கூட்டிலிருந்து ஜோடி சேர்ந்து எட்டிப் பார்த்த சிட்டுக் குருவிகள் அதுவரையிலும் பழக்கம் இல்லா த அந் நிய ன் ஒருவனைச் சந்தித்ததாலோ என்னவோ, வித்தியாசமான குரெலெடுத்துக் கிறீச்சிடு கின்றன. .