பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சுவரிலும் காலம் ஒடும். அத்தாட்சி ஒன்பதுமுறை. முறை தப்பாமல் ஒலித்த - எதிரொலித்த மணிச்சத்தம். ஊட்டினாள் அத்தைமகள். உண்டான் மாமன்மகன். வறுத்த விளை மீன்துண்டத் தினின்றும் முள்ளைப் பிரித்து நீட்டிய நிம்மதி வீரமணிக்குக் கிட்டுகிறது. 'இன்னம் ஒருவாய்... என்று கெஞ்சினாள் சுந்தரி. போதும், போதும். வயிறு நிறைஞ்சிடுச்சு !' என்றான் முத்தையன். இருந்த இடத்திலேயே வாயைக் கொப்பளித்து எச்சிலைக் சுகச்சிதமாக முற்றத்திலே துப்பினான். அவன் படு .ெ க ட் டி; - இம் மி கூ ட அழவில்லை!-அவன் முத்தையனா, இல்லை, கொக்கா ?... தாம்பூலத் தட்டு வருகிறது. ஏலக்காயை எடுத்துமென்றான் முத்தையன் ! - 'முடியாத என் கதையோட விட்ட குறையை நொடியிலே தொட்டு முடிச்சுப்பிடுவேன் ! - அயித்தை மகளே !. நான் உயிரும் உடம்புமாக இருக்கிறப்பவே, உன்னோட அன்பான முகத்தையும் மனசையும் ஒருதரம், ஒரேயொரு தரமாச்சும் கண்ணாறக் கண்டுப்புட வேணும் என்கிற தர்ம நாயமான என் வைராக்கியம் அங்கீகாரம் பெற்றிடுச்சு ; தகுந்த காபந்தோட நான் கடல் கடந்தேன் ! - சத்தியமாய்ச் சொல்லுறேன் வழியெல் லாம் உன் நினைப்பே தான், அயித்தை மகளே ! உனக்கு நான் அடிநாளிலே தந்த வாக்குறுதியோட நினைப்பையும் ஆசையையும் மீறி, அங்கே என்னோட தமிழினப்பற்றுத் தான் உச்சத்திலே நின்னு என்னை ஆட்டிப்படைச்ச அந்தரங்கத்தை என் மனசுதான் அறியும் ! ஒரு வேளை, வி-6