பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 என் வாக்கை வேதவாக்காக மதிச்சும் நம்பியும் நீ இன்னமும் கூட எனக்காகக் காத்திருக்கும் பட்சத்திலே, உன்னை உனக்கு இஷ்டமான, உண்மையுள்ள ஒரு நல்ல மாப்பிள்ளைக்குக் கண் ண | ல ம் கட்டி வச்சுப்புட வேணும்னு முடிவு கட்டியிருந்தேன். எனக்கு உண்டான துல்லியமான கடமையை என் ஸ்தானத்திலே நின்று உன் ஆசைமச்சான் வீரமணி நிறைவேற்றி முடிச்சிட்ட நல்ல தாக்கலை இங்கிட்டுக் கேள்விப்பட்டதும், என் மனசு அடைஞ்ச சமாதானத்தை மகமாயிதான் அறிவா ளாக்கும் ! அன்பிற்கு இளையவள் பேரில் நிலைத் திருந்த அன்பான பாசம் பார்வையைத் திசை மாற்றிய பின், பிரயாணப்பையை நகர்த்திப் பிரித்துப் பள பளப்பான உறை ஒன்றை எடுத்தான் முத்தையன், தாலிக்கு உறவும் உரிமையும் பூண்டவர்களுக்குக் கொட்டாவி வருகிறது. வீரமணி, நீங்க இப்ப எனக்கு ஒரு உத்தரவு தருவீங் களா?” 'சொல்லுங்க, முத்தையா அன்னாச்சி !' 'என் அயித்தை மகளுக்குக் கண்ணாலத்துக்காக அக்கரைச் சீமையை மிதிச்சதுமே, ஒசத்தியான காஞ்சிக் கண்டாங்கிரியும் அபூர்வமான ரவிக்கைத் துணியும் ஏராளம் 'சல்லி கொடுத்து வாங்கி வச்சேன். அதுகளை ஒங்க அன்பான சம்சாரத்துக்கு நான் கொடுக்கிறத்துக்கு இப்பத்தான் காலநேரம் ஒத்து வந்திருக்குதுங்க ; கடைசி கடைசியான என்னோட தருமமான ஆசையை நிறை வேற்றிக்கிட நீங்க பெரிய மனசு பண்ணி அனுமதி தந்தீங்கன்னா என்னோட மனசும் மனச்சாட்சியும் நிம்மதிப்பட்டு, பாவியான நான் கடுகத்தனை புண்ணி யத்தையாச்சும் சம்பாதிச்சுக்கிட வாய்க்குமுங்க !'அட, பாவமே முத்தையன் பச்சைப் பாலகனாக ஆகி விட்டானே ?... - .