பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஏக்கம் மேலிடவும் ஆர்வம் மேலோங்கவும் சுந்தரி தன் புருஷனை ஊடுருவிப் பார்வையிட்டாள். வீரமணியின் திருஷ்டி இப்போது விருந்தாளி பேரில் நிலைக்கிறது. உணர்வுகளின் புயல் வீச்சுக்குக் கண்கள் அடிபணிகின்றன. 'உங்க மேலான அன்புக்கு உரித்தான உங்களோட அத்தை மகளுக்கு மாமன் மகன் நீங்க இஷ்டப்பட்ட பரிசுகளைத் தாராளமாய்க் கொடுத்திடுங்க, அண்ணாச்சியோ !” என்றான். புனித விடியலாய் மனித நேசம் கொடிகட்டிப் பறந்தது வீரமணியின் மகத்தான கருணைக்கு நன்னி சொல்லும் பாங்கில் சிரம் தாழ்த்தினான் முத்தையன். எடுத்துக்கிடு, அயித்தை மகளே !'-நிதானமாகவே இருந்தான் !-ஆகவே, நிதானமாகப் பேசவும் அவனால் முடிந்திருக்கக் கூடும். - கையெடுத்துக் கும்பிட்ட சுந்தரி கைகள் நடுங்கிட அந்தத் துணிமணி உறையை ஏந்தியவாறு உள்ளே போனாள். ஏந்திழையாள் உள்ளே போனவள், சடுதி யிலேயே வெளியே வந்தாள். 'மாமன் மகன் காரவுகளே! எனக்காக நீங்க தந்த துணிப் பொட்டணத்துக்கு நடுவிலே இதுவும் இருக்குதுங்களே ?' என்று கலவரம் சூழ்ந்திடத் தெரிவித்தாள், உள்ளங்கை மூடிக்கிடந்தது. "என்னா புள்ளே அது ?"-வீரமணி. 'இந்தாலே பாருங்க, மச்சானே !' உள்ளங்கை நெல்லிக்கனியென. சுந்தரியின் உள்ளங் கையில் விதியாகச் சிரிக்கிறது அந்தத் தாலி-தங்கத் தாலி. தூக்கு மேடைக் குற்றவாளிக்குச் சமமாக உயிர் துடிக்க, உள்ளம் துடிக்கப் பதறினான் முத்தையன்'