பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 'கங்காணி ஆட்டுக் கடலைக் கொல்லை அலுவலுக்கு வளமைப்படி உண்டான அச்சார ஈவுப் பணத்தை உன் எசமானரு அல்லாருக்கும் குடுத்துக்கிட்டிருக்காங்களே ? நீ இன்னும் வாங்கிக்கிடலையாங்காட்டி ?" 'ஊகூம் ஆத்தா குளமங்கலத்திலேருந்து அரிசி வாங்கிக்கினு திரும்பினடியும் வாங்கிக்கிடும் !’ அவளது அழகான உதடுகளிலே நாணம் மணத்தது. வள்ளி உதட்டைப் பிதுக்கினாள். அவளுக்குக் காசு தான் கடவுள் அந்தக் கடவுள் இப்போது அவள் கைப் பிடிக்குள் அடக்கம் ! மேற்புறக் குடிசையில் சின்னப்பயல் மூக்கன் தாளம் தவறித் தப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறான், இன்னமும். மறுபடி, செல்லி பற்களைக் கடித்தாள். டேலே' பொடிசு தப்புத்தனமான தப்புக் கொட்டப்பூடாதடா, மூக்கா '-ஆணவப் புன்சிரிப்பை இழையோட விட்டாள். பேசும் கண்கள் பேசவில்லை. எதிர்ப்புறத்தில் ராசாங்கம் நடத்திக் கொண்டிருந்த ஆணைகளும் கெடுபிடிகளும் இன்னமும் நிர்த்தாட்சண்யமாகவே ஒலிக்கின்றன ; எதிரொலிக்கின்றன கழுகுக்கு மூக்குமேலே வேர்க்கிற தாட்டம், இந்தப் பாவச் செம்மங்களுக்கு அம்மன் காசு கிடைக்கிறதாக இருந்தாக்கூட, ஒரு அருப்புருவமான கும்மாளம் ஆலாப்பறக்க ஆரம்பிச்சிடுதே !...ம் ; நான் ஒருத்தி துட்புக்கெட்டதனமா அவங்க பேரிலே பெரிசாய்க் குத்தம் கண்டுக்கினு இருக்கேனே ?-இங்கான மட்டுக்கும் என்னா வாழுதாம் ?-நிலந்தெளியிற நேரத்துக்கு ஆத்தா வக்கனைக் கொப்ப உப்புக்கல்லு. தூவி வள்ளிசா ஒரு பீங்கான் சட்டிக்கு நீச்சத்தண்ணி குடிச்சுங் கூட, பசி அடங்காமல் தூண்டித் துருவித் துளைச்சிக் கிட்டுத்தானே இருக்குதாங்காட்டி - ஊம், பசியேதான்