பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அயித்தை மகளே அ ந் த த் தாலியை அந்தியிலே வைத்தியர் ஐயாவைக் கண்டுக்கிட்டதுமே நானே எடுத்துக்கிடத்தான் நினைச்சேன். மனக்குழப்பத்திலே மறந்துப்புட்டேன் அந்தத்தாலியை எங்கிட்டே வீசிப் பிடு. என்பாவம், புண் ணியவதி உன்னையும் சுத்திக் கிடப் போகுது ஊம், என்கிட்டே, என்தாலியைப் வீசிப்புடு, சுந்தரிப் பெண்ணே !' அலறினான். காலடி யில் சரணடைந்த அந்தத்தாலி முடமான அவன் வலது கையில் ஊசலாடியது ; 'புராணப் பாவியான இளங்கேஸ்வரனுக்கு ஜீவன் அவன் இடது தொடையிலே இருந்திச்சாம் ! ஆனா, என் ஜீவன் இந்தத் தாலியிலே தான் இருக்குதாக்கும் ' சுடுநீர் சுட்டுப் பொசுக்கி யிருக்க வேண்டும் - " இந்தப் பாவியினாலே புருஷன் பெண்சாதி உங்க ரெண்டு பேர் தூக்கமும் கெட்டுப் போச்சு. அக்கரைச் சீமைக்குத் தடையையும் விதியை யும் மீறித் திரும்பினால்தான், எனக்கு நிம்மதி திரும்பும். உங்க ரெண்டு பேர் கிட்டவும் பயணம் சொல்லி விடை வாங்காமல் நான் இந்த மண்ணைத் துறக்கவே மாட்டேன். கடைசி கடைசியாக ஒரு வரம் தரவேணும். இந்தப் பாவியை இப்பவே மறந்துப்புடுங்க - புறப் படுறேன். அத்தை மகளே கிளம்புறேனுங்க, வீரமணித் தம்பி!” வாசலிலே, ஈரம் புள்ளிக்கோலம் இருக்கிறது! மகிழம்பூக்கள் கூட மணக்க மறக்கின்றன ! அதோ.. அதோ... முத்தையன். முத்தையன் மறை கிறான் ! - நிலவிலே, நிலவோடு நிலவாக மறைகிறான் ! கஞ்சிப் பொழுது. - ஆதித்த பகவான் தீமிதித் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கலாம்.