பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அரை நாழிப் பொழுதுக்கு முன்னே வெடித்த முதல் இருமலைப்போலவே, இப்போது முழங்கிய இரண்டாம் இருமலும் கரணகொடுரமாகவே அமைந்தது. மறுபடியும் விம்மிப்புடைத்துச் சுய உணர்வுகளை மீட்டுக் கொண்டு காட்டாற்று வெள்ளம் பாய்ந்த விழி களைத் திறந்தாள் சுந்தரி - வீரமணியின் சுந்தரி மாமன் மகனே, ஒங்க கதை அவலமாகி அலங்கோலம் ஆயிடுச்சே ? அவுகளை எக்குத்தப்பாய்ச் சோதிச்சுப் பூட்டியேடி, மகமாயி ? - மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். வெள்ளைக்கல் மூக்குத்தி வெள்ளைத்தனமாக அழகு காட்டியது ; அழகைக் கூட்டியது. அடித்துப் போட்டமாதிரி மீண்டும் துரங்க ஆரம்பித்து விட்டான் வீரமணி. "மச்சானே ! ஆசைமச்சானே !' தொட்டு எழுப்பினாள் உரிமைக்காரி. முந்தாநாள் ராவிலே மாமன் மகன் வாரதுக்கு முந்தி மச்சான்காரர் வயிற்றுக்கு வஞ்சனை பண்ணாமல் வசமாய்ச்சாப்பிட்டது தான். நேத்து முச்சூடும் காளவாய்ப் பக்கமே நாடலே: சோறு ம் தேவைப்படலேன்னு சொல்லிட்டாங்க ! ராத்திரிதான் திடுதிப்னு காய்ச்சல் வந்து, உசிரை சுண்டி இழுத்தாப்பிலே .ெ ந ஞ் சிவ லி யும் வந்திடுச்சே ?... இன்னைக்கு உச்சி நேரமாயிடுச்சு ; இன்னமும் பத்தியக் கஞ்சி குடிக்காமல் இருந்தாக்க, குடல் காய்ஞ்சி போயிடாதா? ஒருவேளை காற்று, கறுப்பைக்கண்டு மச்சான் பயந்திட்டாகளோ ? மகமாயி ஆத்தாளே " - தண்ணீராய் உருகினாள். உடையவள். உசும்பாமல் வீரமணி புரண்டு படுத்தான். . . . சுந்தரி தன் கணவனை இப்பொழுது தட்டி எழுப் Ꮮ1© fᎢórET &I , -