பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஐயையோ ... மகமாயி ! மூடின கண்களைத் திறக்காமல், வீரமணி அலறிக் கொண்டிருந்தான் ; கதறித் கொண்டிருந்தான். 'அண்ணாச்சி முத்தையன் அண்ணாச்சியோ ...கூத்தும் கும்மாளமுமாய் இருக்கவேண்டிய உங்களோட வாழ்க்கை என்னோட இயல்பான மனித நேசம் மனிதாபிமானம் காரணமாகவும், விதியின் வினையான தூண்டுதலோட விளைவாகவும் பாழகிப் போச்சுதே ?- அந்தப் பாவப் பழிக்கு ஆளான என்னை நீங்க மன்னிச்சுப்புட மாட்டீங்களா ? மனசறியாமல் செஞ்ச பாவத்துக்கு மனசறிஞ்சு பரிகாரம் பண்ணத்தான் கங்காணித் தோப்புப் பாதாளக் கேணிக்குக் காலம்பறவே நலியாமல் கொள்ளமால் ஒட்டம் பிடிச்சேன். ஆனா, என் கெட்ட காலம், உங்க அயித்தை பொண்ணு, அதான், என் வீட்டுக்காரி கமுக்கமாய்ப் பின்புறத்தாலே வந்து என்னைத் தடுத்துப் பிடிச்சு இழுத்து மண்ணிலே தள்ளிப்பூடுங்க ! தொபுகட்னு விழுந்த என்னை நட்டுவச்சுத் தள்ளிக்கிட்டு வந்து இங்கிட்டுச்சிறை வச்சிருச்சு !... நான் பித்துக் குளி கிடையாது? நான் பேடியும் இல்லே ; சோப்னாங்கி யும் இல்லே... பயந்தாங்கொள்ளியும் நான் இல்லே - நான் மானரோசத்துக்குக் கட்டுப்பட்ட அசல் ஆம்பிளைச் சிங்கமேதான் - ஆனாலும், என் மனசும் மனச்சாட்சியும் உங்களை நேருக்கு நேரா முந்தாநாள் கண்டதிலேருந்து என்னை அல்லும் பகலும் ஒரே சித்திரவதை செஞ்சுக் கிட்டே இருக்குது எந்த நேரத்திலேயும் நான் கண்ணை மூடிக்கிடுவேன் :- ஆகையாலே, உங்களுக்கின்னு ஆதி நாளிலேயே விதிச்சிருந்த உங்க அயித்தை மகள் சுந்தரிக்கு உங்க கைவசத்திலே இருக்கிற அந்தத் தாலியைக் கொண்டு மறுதாலி கட்டி, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்பக் காலத்...' - தொடர்ந்த பேச்சுக்குத் தொடர்பு சேர்க்க மாட்டாமல் அவனை - வீரமணியைத் திணற அடித்தது. அந்தப் பயங்கர ஒலம் ! . . .