பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 சுந்தரி - வீரமணியின் சுந்தரி மகமாயி கோயில் அக்கினிச்சட்டியைத் தலைமேல் கவிழ்த்துக் கொண்ட வளாகத் துடிதுடித்து நடுநடுங்கிக் குலுங்கிக் குலுங்கிக் கதறித் கொண்டே, "அட, பாவி!” என்று அலறிய, தாலி கொடுத்தவனின் சொக்காயை உடும்பாகப் பற்றி நிறுத்தி னாள் யோவ் ஊரறியவும் சாதி சமூகம் அறியவும் நாள் பார்த்து நட்சத்தரம் பார்த்து எனக்குத் திருப்பூட்டி, உம்மோட அருமை பெருமையான பொஞ்சாதியாக ஆக்கிக்கிட்ட எனக்கு இப்ப பதினெட்டு, பத்தொம்பது மாசம் கழிஞ்ச இன்னிக்கு எவனோ அந்தியன் ஒருத்தன் மறுதாலி கட்டவேணும்னு ரோசிக்க வாய்க்குவந்தபடி உளறிக் கொட்ட மனசு துணிஞ்ச நீ... நீ... மனுச்ச சென்மமே இல்லே . மிருகத்திலேயும் கேடுகெட்ட ஈனத்தனமான, அற்பத்தனமான நீ... நீ... என்னை மான ரோசம் கெட்ட தேவடியாள்னா தப்புக் கணக்குப் போட்டே 1... அட், பாவி !' என்று உச்சாடனம் பெற்ற வளைப்போன்று ஓங்காரக்குரலெடுத்து ஓலமிட்டவளாக, வீரமணியின் கன்னங்களிலே மாறி மாறி, மாற்றி மாற்றி ஓங்கி அறைந்தாள் சுந்தரி - வீரமணியின் சுந்தரி, வீரமணி மருக்கொண்டு, பித்துப் பிடித்தவனாக, "ஐயையோ !” என்று கூக்குரலிட்ட வண்ணம் வெளியே பாயத் தலைப்பட்டான். . மறு இமைப்பில், சுந்தரி குறுக்கே மறித்து, தனக்குத் தாலி கட்டிய வீரமணியின் சிண்டைப் பிடித்துக் குலுக்கி அலக்காக நிறுத் தி னாள் !-ஏய் !. பொட்டுப் பொழுதுக்கு முன்னே, சாமி பூதத்துக்குக்கூட அடுக்கா மல், மறுதாலி அப்படி இப்படின்னு அநியாயமாவும் அதர்மமாவும் பிதற்றிக்கிட்டு இருந்த உன்னோட அசிங்க மான உளறலை நீ முடிக்கிறத்துக்குள்ளவே, நானே பத்ரகாளியாய் உருமாறி உன்னை-உம்மை ஆக்கினை செஞ்சு உன் தலையை வாங்கியிருப்பேன் 1 . ஆனா...