பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அன்னிக்கு என் ஆத்தாக்காரி என்னைச் சோதிக்க, நான் உங்களை ஒரு நம்பிக்கையோடே சோதிச்சப்ப, நீங்க ஒரு நல்ல ஆண்பிள்ளையாய் நின்னு எனக்கு நல்ல வாக்குத் தந்து, எனக்குக் கண்கண்ட தெய்வமாய் அமைஞ்சு எனக்குத் தாலிகட்டின ஒசத்தியான அந்தப் புண்ணியத் துக்கோசரந்தான் உங்களை நான் இம்மட்டோ விட்டுப் பூட்டேன் !...” என்று பொங்குமா கடலைக் கொதித்துத் தன்னை மறந்த லயிப்பிலே செருமினாள். அந்தரங்க சுத்தியமான உண்மையுள்ள ஒரு பொஞ்சாதிக்கு உண்மை யான ஒரு புருசனாய் இருக்கிறத்துக்கு உண்டான அரு கதையை விற்றுப்பூட்ட உனக்குக் கொடுவாள் மீசை ஒரு கேடா ?...மனசு, மனச்சாட்சின்னு பைத்தியக்காரத்தன மாய் என்னென்னமோ புலம்பு lயே ?-உன்னோட மனசையும் ம ன ச் சா ட் சி ைய யும் உடைப்பிலே போடய்யா ...துவே ...' என்று. கொந்தளித்துக் கூக் குரலிட்ட அவள் காறித்துப்பி விட்டு, வீரமணியை மறுபடி உலுக்கினாள். யோவ் ...பின்னாலே போயிட்டு நொடியிலே திரும்பிடுவேன்; அது மட்டும், கல்லுக் கணக்கிலே அங்கிட்டு இங்கிட்டு நகராம அப்படியே நில்லும் ! எஞ் சொல்லை மீறினால், அப்புறம் நடக் கிறதே வேறே !...ஆமா கல்லாகிப்பூட்ட உமக்குக் கல்லாகி நிக்கிறத்துக்கு என்ன கேடாம் ?...' என்று ஆணை பிறப்பித்து விட்டு உள்ளே விரைந்நாள் சுந்தரி. அவள் : சுந்தரி ! வீரமணி சிலையானான் ! சுந்தரி சபித்தாளோ ? பரிகாரி வீட்டுக் கோழி வேளை தப்பின வேளையில் இப்போதுதான் கூவுகிறது !.