பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பேய்க்கணங்கள் நெளிந்தன. அள்ளிச் செருகிய கொண்டையில் மகிழம்பூச் சரத்தைச் செருகியபடி, புள்ளிவைத்த வேர்வைக் கோலத்தில் திருச்சூரணம் பொலிந்திடத் திரும்பினாள் சுந்தரி. பத்தியக்கஞ்சிச் சருவச்சட்டியைப் பூக்கல் தரையில் இறக்கி வைத்து, லோட்டாவில் ஊற்றி ஆற்றி உப்புக் கல்லைக் கொத்தாகவே அள்ளிக் கொட்டிக் கலக்கி, மறு படியும் வாயில் துளி ஊற்றிப் பதம்பார்த்துவிட்டு நீட்டினாள். 'இந்தாய்யா ? பத்தியக் கஞ்சியைக் குடியும்! உம்மருக்காக ஆசையோட வச்ச பத்தியக் கஞ்சியை உம்மோட ஆசைக் கண்ணாட்டியாய் நின்னு எங் கையினாலே கடைசியாய்க் கொடுக்கிறேன்; ஊம், குடியும் !’ என்றாள். மகுடிக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி, மளமள வென்று பத்தியக் கஞ்சியைக் குடித்தான் வீரமணி. சுடு நீரும் உ ப் புக் க றி த் தி ரு க் க வே ண் டு ம். நப்புக்’ கொட்டினான். வீரமணியை ஊடுருவினாள் அவள். அவள்: வீரமணியின் சுந்தரி ! 'ஐயாவே 1. எம்புட்டு நேசமச்சான்காரவுகளே ! ஆத்தா மகமாயிக்கு இந்நேரத்துக்கும் திரிகரண சுத்தியான சாட்சியமாய் நின்னுகிட்டிருக்கிற உங்களோட அருமை பெருமையான பெண்டாட்டியாக என்னை ஆசை தீரக் கடைசியாய் ஒருவாட்டி நல்லாப் பார்த்திக்கிடுங்க 1உங்கமாதிரி இல்லே நான் !... நான் நினைச்சப்பவே என்னாலே செத்துப்போயிட முடியுமாக்கும் !... இப்ப நான்... நான் பூவும் பொட்டுமாய்ச் சுமங்கலியாய்ச் சாகப்போறேன் - நான் சாகிறபரியந்தம் நீங்க நிலைப்