பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 படியை விட்டு நகரவே படாது ஆமா, ஆத்தா மேலே ஆணைக்கட்டிச் செப்பிட்டேன் ... கல் ஆகிட்ட உங்களுக் குக் கல்லாகி நிற்கிறத்துக்குக் கசக்கவா போகுது !... ஆமா... பூவும் பொட்டுமான உங்களோட அன்பான பொஞ்சாதியா மகராசிப் புண்ணியவதி நான் செத்துச் சிவலோகம் பறிஞ்சுதுக்கு அப்பாலே, நீங்க எக்கேடு கெட்டும் எருக்கு முளைச்சுப் போய்த் தொலைங்க !...” மார்பகத்திலே ஊஞ்சலாடிய, மான ரோசத்தோடு ஊசாலாடிய தாலியைச் சிக்கெனப் பிடித்துக் கொண்ட சுந்தரி, எரிமலையாக வெடித்து பூகம்பமாகக் கிடுகிடுத்து புயலாகச் சிறி, மின்னலாகக் கீறிப் பாய்கிறாள் ! - அவள் - சுந்தரி ... உயிர் கொண்டவள் கி ழி த் த இலட்சுமணன் கோட்டைத் தாண்டமாட்டாமல், அடித்து வைக்கப்பட்ட கல் உயிர் பெற்ற பாவனையில் சுந்தரியின் வீரமணி ஒப்பாரி வைத்தான். 'எனக்குத் தெய்வமான நீயே என்னை விட்டுப் பிரிஞ்சிட்டா அப்புறமா நான் எந்தத் தெய்வத்துக்கிட்டே விழுந்து புலம்பி முறையிடுவேனாம்? எம்புட்டு ஆசையான சுந்தரிப் பொண்ணே ! நீ செத்துப் போனா, மறு நொடியிலேயே நானும் செத்துப் போயிடு வேன் :- உம்பேரிலே ஆணை இது !' - மண் கசிந்திடக் கதறிக்கொண்டே இருந்தான் ! - வெய்யில் சுடாமல் எரிக்கிறது. திட்டி வாசலுக்கு மெட்டி குலுங்கப் பாய்ந்த சுந்தரி, கால் இடறவே, தட்டித் தடுமாறிப் பார்வையை இறக் கியதும், "ஐயையே 1. ஆத்தாடியோ !” என்று மண்ணும் விண்ணும் அதிரப் பீறிட்டு அலறினாள்.