பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9] அவள் காலடியிலே முத்தையன் கிடக்கின்றான். அவனது நாசியிலிருந்தும் வாயிலிருந்தும் நுங்கும் நுரையு. மாக ரத்தம் பீச்சியடிக்கிறது :- ஆத்தாடி... சுந்தரியோ ...அரை நாழிக்கு முந்தி உங்கிட்டேயும் உம் புருசன்கிட்டேயும் பயணம் சொல்லி விடை வாங்கிக்கிட நான் வந்தேன். உன்னோட நேச மச்சானின் புத்தி கெட்ட உளறல் பேச்சைக் கேட்ட நீ, கற்பின் கனவியாகிச் சினந்து சீறி உம் புருசனை ஆவேச ஆத்திரத்தோட அறைஞ்சே அறைஞ்சிட்டு அலறிக்கதறி வீரகர்ஜனை செஞ்சாய் ! சுந்தரி... ! நம்ம மூஇl பேருக்குள்ளே, சட்டப்படியும் சரி, விதிப்படியும் சரி, மெய்யாலுமே நான்தான் குற்றவாளி நான் செத்து மடியறதுதான் தர்ம நாயம் !...விதியோட விளையாட்டு இத்தோட மங்களம் பாடிக்கிடட்டும் !...நீயும் உம் புருசனும் எப்பவும் போலே கூடிக் குலாவிச் சந்தோசமாய் வாழுங்க -கும்பிடு கொடுத்தான் ; கும்பிடுக்கு ஊனம் ஏது?. தொண்டையை அடைக்கிறது ! கண்கள் மேலோங்கிச் சுருண்டு உருண்டன ! - "ஐயையோ ...மாமன் மகனே !” சுந்தரி ஒலமிட்டாள். .هه، وg முத்தையனுக்குப் பேச இன்னும் இருக்கிறது ! சுந்தரி ... ஆத்தாளே சுந்தரி ! உன்னோட வயித்திலே வந்து பொறக்கப் போற உன்னோட அன்பு மகன் நான் .. ஆமா; இனிமே சத்தியமாய் நீ எனக்கு ஆத்தாளேதான் ! உனக்கு ம க னாக ப் பொறந்து வளர்ந்து ஆளானடியும், நீ மருமகளாகத் தேர்ந்தெடுக் கிறவளுக்குத் திருப்பூட்டத் தாலி வேனுமில்லையா ? இந்தா, ஆத்தா '- அந்தத் தாலியைச் சமர்ப்பித்தான்