பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 105

ரூபாய் மற்ற செலவு 25. சாப்பாட்டுக்கு என்ன செய்வது?

இங்கே தான் ஆண்டவன் என்னை ஆட்படுத்திவிட்டான். வறுமையோடு என் வாழ்வு. நிறைந்து இருந்தது. நான் உதவி செய்தவர்கள், பலர் என்னிடம் வந்து கொண்டிருந்த பலர், என் மாணவர்கள் உட்பட, எல்லோரும் நைசாக விலகிக் கொண்டார்கள். வழியில் பார்த்தாலும், பார்க்காதவர்கள் போல ஒதுங்கிப் போனார்கள்.

மனிதர்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டேன். வறுமை, பசி, என்ன என்பதையும் புரிந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என நான் பழகிக் கொண்டேன். என் மனைவியையும் குழந்தைகளையும் பசி தெரியாமல் வாழ்வித்துக் கொண்டேன்.

எட்டு மாதங்கள் பத்திரிக்கையை நடத்தினேன், ஆனால், என் இலட்சியமோ எட்டாத இடத்தில் நின்று கொண்டு கை நீட்டி அழைத்தது. கைகளை உயர்த்தக்கூட முடியாத அளவுக்கு பணமுடை. பலஹீனம்.

அதிசயப் பத்திரிக்கை அநியாயமாக மாண்டு போனது. மாண்டுபோனதை என்னால் பார்க்கத்தான் முடிந்தது. பசிக்கு முன்னால் இலட்சிய வேகம் எப்படி நிலைக்கும்? அதிசயம் அகால மரணத்தை அடைந்தது.

இனி கெளரவத்தை சம்பாதித்தாக வேண்டும். அதற்கு பணம் தான் மூலதனம் என்பதை தெரிந்து கொண்டேன். பட்டபின் ஞானியல்லவா!

கோடம்பாக்கம் எல்லையை விட்டு மேற்கு மாம்பலம், ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்தேன். அந்த வீட்டிற்கு வந்த பிறகு எத்தனை எத்தனை அனுபவங்கள்! எனக்கு வித்தை காட்டிய விந்தை நிகழ்ச்சிகள். விளையாட்டு இலக்கியத்தின் விதை தூவப்பட்ட காலக் கட்டம். சுவாரசியமான வாழ்க்கை என்றும் கூறலாம். இலக்கிய வளர்ச்சிக் காக நான் பட்ட என் துன்ப சம்பவங்கள் ஏராளம். ஏராளம்.