பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

தன் வாலை சுருட்டி, அடக்கி மடக்கிக் கொண்டு விட்டது.

ஒராண்டு இப்படியே கழிந்தது. அன்றாடம் பல

சோதனைகள்- வேதனைகள். இப்படி பயங்கரமான வீட்டுக் குள்ளே வந்துவிட்ட அவமானங்கள். அலங்கோலங்கள்.

இந்தச் சூழ்நிலையிலும் நான்சும்மா இருக்கவில்லை. ஒரு நாடகக் குழுவை ஆரம்பித் தேன். நவராஜ் நாடக மன்றம் என்ற பெயரிட்டு, நாடகம் எழுதி, அரங்கேற்றிக் கொண்டிருந்தேன்.

நாடகம் போட பணம் ஏது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பணம் செலவு செய்கிற நடிகர்களாகப் பார்த்து போட்டுக் கொள்வது, வேஷம் கொடுத்து டிக்கெட் விற்கும் திறமையுள்ளவர்களாக அழைத்து நாடகம் போட்டேன்.

இப்படியாக, நாட்களை ஒட்டிய நேரத்தில் தான், அதிலே இருந்த பெரிய வீடு காலியானது. வாடகைக்கு எனக்குக் கொடுக் கப்பட்டது. நிம்மதியோடு அந்த வீட்டிற்குள் குடி புகுந்தேன்.

உடலை அழிக்கும் காரியம் நடந்த வீட்டில். உடலை வளர்க்கும் உடற்பயிற்சி மன்றம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது இது போன்ற பலப் பல புதிய வேலைகள் வேகமாக தொடங்கப்பட்டன.

1968-ம் ஆண்டிலே நடைபெற்ற நிகழ்ச்சிகள் இவை. பள்ளியில் வேலை. மாலையில் டியூஷன். அதற்குமேல் நாடக ஒத்திகை. இப்படியே பொழுதுகள் கழிந்தன.

நான் நாடகம் நடத்தியபோது, என்னுடன் இருந்து, என்

நாடகக் குழுவில் ஒத்துழைத்த இருவர் இன்று, சினிமாத்துறையின் உச்சக்கட்டப் புகழில் இருக்கின்றார்கள்.