பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - - 15 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி |

விளையாட்டுப் புத்தகம் எழுத வேண்டும் என்று மனதுக்குள்ளே உறுத்தல்களும் உந்துதல்களும், உணர்வுகளும் நிறைய இருந்தாலும், நினைவுக்கு உற்சாகம் வரவில்லை. நேரம் வரவேண்டாமா?

சேது ஒரு நாள் ஒருவரை அழைத்து வந்தார். இவர் பெயர் ராமநாதன். நல்ல மனிதர். பால் வியாபாரி. உங்கள் வீட்டுக்குப் பால் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார்.

ஒரு மனிதரை எப்படி கவர்ந்து, அட்ராக் ட் செய்ய வேண்டும் என்பதற்கு சாட்சியாக அவரையே சொல்லலாம். அந்தப் பால் காரர் பேச்சில் செயலில், நடைமுறையில் , பழக்கத்தில், நான் நம்பி விட்டேன்.

அவர் எதற்கு அப்படி அடக்கத்துடன் நடந்து கொண்டார் என்பது அப்போது எனக் குப் புரியவில்லை. எல்லோரும் என்னைப் போலவே இருப் பார்கள் என்று தான் நான் நம்பினேன். என்னைப் போல என்று எழுதியதற்கு ஒரு காரணம் உண்டு.

எனக்கு பணம் தேவை தான். ஆனால் நான் பணத்துக்கு அடிமையில்லை. பணத்தின் பின்னால் போகிறவனும் அல்ல. பிறர் பனத்துக்காக பொய் சொல்வதும் இல்லை முயற்சிகள்

செய்வதும் இல்லை போன்ற செயல்கள் எனக்கு

எப்போதும் பிடிக்கும் என்பதால் தான், என்னைப் போல்

--.

என்றேன்.

  • ஒர் எருமை மாடு வாங்கி விட்டால், ஒரு நாளைக்கு 10 ரூபாய் லாபம் கிடைக்கும். காலை மாலையில் அரை லிட்டர் பாலும் வீட்டுக்கு கிடைக்கும், 6 மாதத்தில் மாடு வாங்கிய பணம் முழுவதும் கைக்கு வந்து விடும். பிறகு மாட்டிற்கு போட்ட பணம் நமக்கு முதல் தானே என்று ஒரு யோசனையை பால்காரன் ஒருநாள் என்னிடம் கூறினான்.