பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| () டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

என்னால் முடிகின்ற காரியமா இது இல்லையே! தனி ஒருவனால் ஆகக்கூடிய வேலையா இது? முடியாதே! வெறுப்பாகப் பார்த்த விளையாட்டுத் துறையினர்! வியப்பாகப் பார்த்த பொதுமக்கள்! நெருப்பாக நினைத்த தொழில் துறையினர்.

குறிப்பாகப் பார்த்துஉதவிய குணக் குன்றுகள், என் வழி நெடுக வந்த ஏராளமான எதிர்ப்புகள்.

இவ்வளவையும் பவ்யமாக ஏற்றுக்கொண்டு, நான் நடந்து வந்த பாதையில் பூத்த மலர்கள்தாம், விளையாட்டுத்துறை இலக்கியமாக, இன்று எழில் மணம் எல்லோரிடமும் வீசிக் கொண்டிருக் கின்றன.

என்னிடம் எழுதவேண்டும் என்கிற ஒரே நினைப்பு. இரவு பகல் எனறு பாராமல் உழைத்த உழைப்பு. எழுதி ஆக வேண்டுமே என்று என்னுள்ளே முகிழ்த்துக் கெர்ண்டிருந்த சிலிர்ப்பு. எந்த நேரத்திலும் எழுத்தின் மேலேயே குறியாக இருந்த துடிப்பு.

இவை மட்டுமே, இப் படி இலக்கிய நூல்களைக் குவித்துவிட்டது என்று சொன்னால், என்னைப்போல் ஒரு அகம் பாவம் கொண்டவன் இந்த உலகில் வேறு யாருமே இருக்கமுடியாது.

ஏனென்றால், இலக்கிய நூல்களை எழுதுவதற்கு, நான் ஒரு கருவியாகத்தான் இருந்திருக்கிறேன். என்னுள்ளே இருந்து இயக்கிய, இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு தனிப் பெரும் சக்தியை, நான் எப்படி மறந்துவிடக் கூடும்?

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டு, இயக்கி வைத்த, என்னை ஏற்றமுறச் செய்திருக்கிற, அந்த